தினமணி கொண்டாட்டம்

மலையாளத்தில் த்ரிஷா

DIN

அவ்வப்போது மலையாள சினிமாவில் தலைக்காட்டுவதோடு நிறுத்திக் கொள்வார் த்ரிஷா. தமிழில் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்தவரை மலையாள சினிமா அழைத்தாலும் போக மாட்டார். அதிக சம்பளம் கேட்டும் கிடைக்காமல் போனது மலையாள சினிமாவை அவர் ஒதுக்க காரணமாக அமைந்தது.
 இந்த நிலையில் மோகன்லால் ஜோடியாக மலையாளப் படத்தில் நடிக்க இருக்கிறார் த்ரிஷா.
 தமிழில் ஒரு சில படங்களில் நடிக்கிறார். இதனால் கடந்த ஆண்டு மலையாளத்தில் நடிக்க கேட்டதும் ஒப்புக்கொண்டார். "ஹே ஜூட்' என்ற மலையாள படத்தில் அவர் நடித்தார். படம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தில் நடிக்க அவரை கேட்டுள்ளனர். இதில் நடிக்க த்ரிஷா சம்மதிப்பார் என கூறப்படுகிறது. "திரிஷ்யம்' படத்தின் வெற்றிக்கு பிறகு ஜீது ஜோசப் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT