தினமணி கொண்டாட்டம்

தினமணியும் நானும்: பேச்சாளராக மாற்றியது

ஆ.பி. ரோஸ்லின் ஜெஸிந்தா

நான் ஒரு பட்டதாரி ஆசிரியை, தினமணிக்கும் எனக்குமான உறவு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. திருமணத்திற்குப் பிறகு எனது கணவர் அறிமுகப்படுத்திய தினமணி அதில் வரும் தலையங்கம், கட்டுரை மற்றும் துணுக்குகளைப் படித்து மதுரைக் கல்லூரி மேல் நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் நடத்தி வரும் பாரதி விழாவில் ஆசிரியருக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றுள்ளேன்.

அதுமட்டுமல்லாமல் என்னிடம் பயின்ற மாணவ மாணவிகளையும் பல போட்டிகளில் பங்கேற்க செய்து பரிசுகள் பெற ஊக்கப்படுத்தி எனது பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளேன். அத்தனைக்கும் எனக்கு உரமூட்டியது தினமணியே.. இன்று நானும் தினமணி வாசகி என்பதில் பெருமைப்படுகிறேன். கட்டுரையாளராக, பேச்சாளராக, கவிதை படைப்பவராக, நாடக வசன கர்த்தாவாக என்னை மாற்றியது தினமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT