தினமணி கொண்டாட்டம்

படப்பிடிப்பில் அஜித் காயம்

தினமணி

"நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு "வலிமை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். எச்.வினோத் எழுதி, இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. நயன்தாரா தொடங்கி நஸ்ரியா வரை பெயர்கள் அடிபட்டன. கடைசியாக "காலா' படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹூமா குரோஷி என்று சொல்லப்படுகிறது.
 இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்தது. அஜித் நடித்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தநிலையில் பைக் சேஸிங் காட்சியை சமீபத்தில் படமாக்கி இருக்கிறார்கள். இந்தப் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த ரசிகர்கள், அஜித் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ஹேஸ்டேக்கை உருவாக்கி பிரபலப்படுத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT