தினமணி கொண்டாட்டம்

அந்தகாரம்

DIN


விக்னராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் "அந்தகாரம்'. அட்லி தயாரித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் திரையரங்குகள் எல்லாம் மூடியிருப்பதால் பல படங்கள் வெளியாகாமல்  முடங்கி உள்ளது. 

இதனால் தயாரிப்பாளர்கள் அமேசான், நெட்பிளக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் நேரடியாகப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த வகையில் முதலாவதாக ஜோதிகா நடிப்பில் உருவான "பொன்மகள் வந்தாள்' படம்  நேரடியாக  வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றது. இதையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள "பெண்குயின்' திரைப்படம் ஜூன் 19} ஆம் தேதி அமேசானில் வெளியாக உள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் "அந்தகாரம்' படமும் இணைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT