தினமணி கொண்டாட்டம்

தமிழில் வரும் ஈரானிய படம்

DIN

புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கி 1997-ஆம் ஆண்டு வெளிவந்த படம்"சில்ரன் ஆஃப் ஹெவன்'. உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை இப்படம் வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளைக் குவித்துக் கவனம் ஈர்த்தது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை இயக்குநர் சாமி வாங்கியுள்ளார்.
 இது பற்றி அவர் பேசும் போது... "இதுவரை நான் இயக்கிய படங்கள் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்கப் போகிறேன். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படத்தைக் குழந்தைகளுக்குக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் எப்படி கலந்துள்ளது என்பதைக் குழந்தைகளின் மூலம் அறிந்தேன். அப்போதே இதன் உரிமையைப் பெற்றேன்.
 இப்படம் 80 -களில் நடக்கும் கதை என்பதால் அதன் அடிப்படை உணர்வுகளை சிதைக்காமல் கொடுக்க முடிவு செய்தேன். கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தை தேர்வு செய்தேன். அங்கே படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்துக்கு "அக்கா குருவி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கிறார். பட விழாவில் இயக்குநர் மஜித் பங்கேற்க உள்ளார்'' என்றார் சாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT