தினமணி கொண்டாட்டம்

விவசாயியை விரும்பி கரம் பிடித்த பட்டதாரி

DIN

சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாகப் பரவி வரும் விஷயங்களில் ஒன்று தற்போதுள்ள இளம் வயது பெண்களிடம் தங்களது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால், அவர்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் வியக்க வைக்கின்றன.
 மாதம் குறைந்தது ஊதியம் 1 லட்சம் பெற வேண்டும். ஐ.டித்துறையில் அல்லது வங்கிகளில் பணியாற்ற வேண்டும். சிவப்பாக இருக்க வேண்டும் என இப்படியே தங்களுடைய கனவை அடுக்கிக் கொண்டே செல்வோர் தான் அதிகம். இது போன்ற பெண்கள் மத்தியில் பல்லடத்தை சேர்ந்த சரண்யா விவசாயி ஒருவரை திருமணம் செய்து பல தரப்பில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
 டாக்டர், இஞ்ஜினியர் மாப்பிள்ளை வேண்டும் என்று அடம் பிடிக்கும் பெண்கள், விவசாயம் செய்வோரை திருமணம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. இப்படியான காலச்சூழலுக்கு மத்தியில் தனது பெற்றோரின் எதிர்ப்பைமீறி, விவசாயம் செய்து வந்த சந்திரசேகரனை கரம் பிடித்திருக்கும் சரண்யார் யார்?
 பல்லடம் நெகமம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவேல் என்பவரின் மகள் சரண்யா. இவர் பி.பி.எம் பட்டதாரி, இவருக்குத் திருமணம் செய்துவைக்கும் எண்ணத்தில் வீட்டில் வரன் தேடி வந்தனர். தனது உறவினரான சந்திரசேகரன் விவசாயம் செய்து வந்தார். அவருக்கு சரியான வருமானம் இல்லை என்பதாலும், தன்னுடைய மகளைவிட மிகவும் குறைவாக படித்திருந்ததாலும் சரண்யாவுக்குத் திருமணம் செய்ய மாணிக்கவேல் சம்மதிக்க வில்லை.
 சந்திரசேகர் வெளியே பார்த்த வரன்களும் சரிவர அமையவில்லை. இதனால் அவருடைய திருமணமும் தடைபட்டு கொண்டே இருந்தது, ஒரு கட்டத்தில் அவரும் எனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார். இதனை கேள்விப்பட்ட சரண்யா, எனக்கு திருமணம் என்று நடந்தால் அது சந்திரசேகர் உடன் தான். நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து கொள்வோம். அவருக்கு விவசாயத்தில் வருமானம் கிடைக்க வில்லையென்றால் நான் வேலைக்குச் சென்று சம்பாதிப்பேன் என்று சபதம் போட்டு உறவினரையே திருமணம் செய்துள்ளார்.
 விவசாயியை விரும்பி கரம் பிடித்த இவர் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆக உள்ளார்.
 -ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT