தினமணி கொண்டாட்டம்

மகிழ்ச்சிக்கு அளவு இல்லை

முனைவர் சி.சுப்பிரமணியம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழம்  25 ஆண்டுகளைக் கடந்த வெள்ளி விழாவில் டாக்டர் அப்துல்கலாம் கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தின் கலையரங்கில் விழா. வருகிற வழியில் இந்தியப் பாராளுமன்றத்தின் வடிவமைப்பில் அமைக்கப்பட்ட தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தலைசிறந்த நூலகத்தை சில மணித்துளிகள் பார்வையிட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

நேராகப் பல்கலைக்கழக நூலகத்துக்கு வந்த அப்துல்கலாம் நேரம் போனதே தெரியாமல் நூலகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டார். உடன் வந்த அவரின் நேர்முக உதவியாளர்களோ என்னை வறுத்தெடுத்தார்கள். நேரம் ஆகிறது அவரை அரங்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினார்கள். தொல்லை தாங்காமல் நான் அப்துல் கலாமிடம், 'அரங்கத்திற்கு போகலாம்' என்றேன். உடனை என்னைப் பார்த்து "ஏன்' என்று கேட்டார். "மாணவர்கள் எல்லாம் மணிக்கணக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்க வேண்டாமென்பதால் தான் இவ்வாறு கூறினேன்' என்றேன். உடனே "ஓ அப்படியா நாம் போய்விடலாம்' என்று அரங்கத்திற்கு வந்து விட்டார். புத்தகத்தை பார்த்தால் போது அவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவு இல்லை. 

(உலக உத்தமர் காலம் நூலிலிருந்து) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT