படைப்புத்திறனுக்குச் சிறகுகள் தரும் நுண்கலைப் படிப்புகள்!
ஓவியம், சிற்பம், நாட்டியம், பாடல், இசை, படம் வரைதல், இலக்கியம், கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு கலைகளையும்
ஓவியம், சிற்பம், நாட்டியம், பாடல், இசை, படம் வரைதல், இலக்கியம், கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் இணைத்து பொதுவாக நுண்கலை (FINE ARTS) என்றே குறிப்பிடுகின்றனர். இந்த நுண்கலை என்ற பொதுவான தலைப்பின் கீழ் வரும் ஒவ்வொரு கலையையும் தனித்தனியாகப் பயில்வதற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்திய அளவில் பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்கி நடத்தி வருகின்றனர்.
இந்த நுண்கலை என்பது அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக உள்ளது. முதல் பிரிவில் ஓவியம், சிற்பம், படம் வரைதல், கட்டிடக்கலை உள்ளிட்டவை அடங்குகின்றன. இரண்டாவது பிரிவில் இசை, நாட்டியம், பாட்டு, நடிப்பு, இலக்கியம் போன்றவை இடம் பெறுகின்றன.
ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பட்டயப்படிப்பு, மூன்று ஆண்டு பட்டப் படிப்பு, இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு, அதன் பிறகு தேவையெனில், முனைவர் பட்டம் வரையிலும் இந்த நுண்கலையில் படிப்புகள் உள்ளன.
இந்த நுண்கலை பயின்றவர்களுக்கு, நடிப்பு, இசைக்கூடங்கள், கணினி சலனப்படம், எழுத்து, நடனம், நாடக ஆக்கம், ஓவியம், குறும்படத் தயாரிப்பு, கற்பனைக் காட்சி உருவாக்கம், கணினி வரைகலை, படம் வரைதல், தொழில்துறைக்குப் படம் வரைதல், தொழில்நுட்ப வரைபடங்கள் வரைதல், உள்ளரங்க வடிவமைப்பு, உலோக வடிவமைப்பு, இசை, வர்ணம் பூசுதல், புகைப்படம், அச்சு தயாரித்தல், சிற்பம், மேடை நிர்வாகம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பு போன்ற பல்வேறு கலை சார்ந்த இடங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
தற்போது பெருகி வரும் கம்ப்யூட்டர் அனிமேஷன் பகுதியில் இந்த ஃபைன் ஆர்ட் முடித்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.
விஸýவலைசர் அல்லது விஸýசவல் டைரக்டர் என்ற மிகச் சிறப்பான பணிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்தப் பதவியைப் பொருத்தமட்டில், நல்ல பட்டறிவும் கற்பனை வளமும் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, இந்த நுண்கலை பயில அடிப்படை தகுதியாக, நல்ல கற்பனை வளம், சிந்திக்கும் திறன், ஓவியத் திறன் ஆகியவற்றைக் கூறலாம். எனினும் ஆர்வம் இருந்தால் எதையும் கற்க முடியும் என்பதும் உண்மையே.
நுண்கலை தொடர்பான அடிப்படை செய்திகளையும், இதில் உள்ள பிரிவுகள், வேலை வாய்ப்பு உள்ள பகுதிகள் போன்றவற்றை http://www.careerindia.com/courses/unique-courses/what-is-fine-arts-degree-scope-and-career-opportunities-011398.html என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு அறியலாம்.
தமிழ்நாடு அரசின் கலை மற்றும் கலாசாரத் துறையின் கீழ் செயல்படும் நுண்கலைக் கல்லூரிகள் பற்றிய தகவல்களையும் அங்கு வழங்கப்படும் படிப்புகள் பற்றிய செய்திகளையும் http://artandculture.tn.gov.in/art-culture2.htm என்ற வலைதளத்திற்குச் சென்று பெறலாம்.
தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் அங்கு வழங்கப்படும் பயிற்சிகள் பற்றிய விவரங்களைப் பெறுவதற்கு http://www.tnmfau.in/College.html என்ற வலைதளத்தைப் பாருங்கள். இந்தக் கவின் கலை பயிற்சிகளை டித்தவர்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் வேலைவாய்ப்பு உள்ளதை http://www.naukri.com/fi ne-arts-jobs என்ற வலைதளத்தில் காண்க.