இளைஞர்மணி

சிறப்பு எம்பிஏ மற்றும் நிர்வாகவியல் படிப்புகள்! 

DIN

அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் சிறப்பு எம்பிஏ மற்றும் நிர்வாகவியல் படிப்புகளை படிக்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு எம்பிஏ என்றால் வணிக நிர்வாகம் சம்பந்தமான பொதுவான படிப்பாக இருந்து வந்தது.  

அந்த எம்பிஏவில் சேர்ந்து படிப்பது என்பது மிகவும் அரிதானது என அப்போது பேசப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் அது மிகவும் எளிதானதாக மாறிவிட்டது. தற்போதைய காலச் சூழ்நிலையில் வேறு எந்த படிப்பு படித்தாலும், அதனுடன் சேர்த்து வணிக நிர்வாக படிப்பான எம்பிஏவும் படிப்பதை மாணவர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஏனெனில் நிர்வாக படிப்பு அனைத்து நிலைகளிலும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. 

பொதுவான எம்பிஏ மற்றும் நிர்வாகவியல் படிப்பது என்ற நிலை மாறி தற்போது சிறப்பு எம்பிஏ, சிறப்பு நிர்வாகவியல் படிப்புகளைப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.  அனைத்து துறைகளிலும் நிர்வாகம் செய்வது குறித்து தெரிந்து கொள்ள அந்த துறை சார்ந்த எம்பிஏ, நிர்வாகவியல் படிப்புகளைப் படிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.   அத்தகைய சிறப்பு வாய்ந்த துறைகளைத் தேர்வு செய்து அது சம்பந்தமான எம்பிஏ படிப்புகளை படித்தால் வேலை கிடைப்பது உறுதி.

சிறப்பு எம்பிஏ படிப்புகள்:
சுற்றுலா,  மருத்துவமனை, பொருளாதாரம், விமான போக்குவரத்து, சில்லரை வணிகம் உள்ளிட்ட துறைகள் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.  அதனால் அது சம்பந்தமான எம்பிஏ படிப்புகளைப் படித்தால் வேலை உடனடியாக கிடைக்கின்றது.
Tourism related Management Courses
Health Care & Hospital Administration
Rural & Agri-Business Management
IT related Management 
Family Managed Business
Communication Management
Tourism related Management 
Real Estate Management
Construction Management
Communication Management
Rural Management
Pharmaceutical Management
Telecom Management
இதில் பட்டயம், முதுகலை பட்டயம், இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகவியல் படிப்புகள், அத்துறை சார்ந்த சிறப்பு எம்பிஏ படிப்புகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய சிறப்பு எம்பிஏ மற்றும் நிர்வாகவியல் படிப்புகளைத் தேர்வு செய்து படித்து வேலை வாய்ப்பு பெறலாம். 
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT