இளைஞர்மணி

ஆலோசனை... வழிகாட்டுதல்!

DIN

ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் (guidance and counselling) சம்பந்தமான படிப்புகளுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. முந்தைய காலங்களில் பள்ளி இறுதி படிப்பு முடித்த மாணவர்கள் அடுத்து எந்த துறையில் உயர்கல்வி கற்பது என்பது கூட தெரியாமல் இருந்தனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கக் கூடியவர்கள் எவரும் இல்லாத நிலை இருந்தது. அதனால் ஆலோசனை, வழிகாட்டுதல்கள் இல்லாமல் மாணவர்கள் அவர்களாகவோ அல்லது அவர்களுடைய பெற்றோர்கள் கூறும் துறையில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்கள். தங்களுக்கு சற்றும் அறிமுகம் இல்லாத துறையை தேர்ந்தெடுத்துவிட்டு சிரமத்தை சந்தித்தவர்களும் உண்டு.
உயர்கல்வி பெற வழிகாட்டுவதற்கும், கல்விக்கு பிறகு வேலை வாய்ப்புக்கு ஆலோசனை வழங்கவும் மற்றும் வழிகாட்டுவதற்கும் ஆலோசகர்கள் தேவையென்ற சூழ்நிலை உருவாகியது. பல்கலைக்கழகங்களில் கூட மாணவர் வழிகாட்டுதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மாணவர்கள் மற்றும் வேலைத் தேடுவோருக்கு வழிகாட்டவும், ஆலோசனை வழங்கவும் கேரியர் கைடன்ஸ் டிரெயினிங் எனப்படும் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடிய நிலை உருவானது. அதற்காக ஆலோசனை மற்றும் வழிகாட்டும் பணியைச் செய்யும் பணியில் ஈடுபடுவர்கள் அதற்கான சில குறுகிய கால பட்டய படிப்புகளை படிக்கத் தொடங்கினர். 
தற்போது வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. அதனால் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது சம்பந்தமாக ஆன்லைனில் பல படிப்புகள் நடத்தப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குபவர்களுக்கு ஓரளவுக்கு சைக்காலஜி எனப்படும் மனோதத்துவம் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியமாகின்றது.
அதனால் வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குபவர்களுக்காகவே சிறப்பு படிப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்படுகின்றன. இத்தகைய படிப்புகள் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. அத்தகைய படிப்புகளை படித்த முடித்த பிறகு தனியாகவே ஆலோசகர் மற்றும் வழிகாட்டுநராக தொழிலை தொடங்கலாம். இல்லையெனில் ஆலோசனை மற்றும் வழிகாட்டும் மையங்களில் பணியில் சேரலாம்.
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT