இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 105

ஆர்.அபி​லாஷ்

பேராசிரியர் கணேஷிடம் ஹைஜேக் எனும் ஆங்கிலச் சொல் எப்படி பிரஞ்சுப் புரட்சிக்கு முந்தின காலத்தில் தோன்றியிருக்கக் கூடும் என விளக்குகிறார்.
கணேஷ்: பிரஞ்சுப் புரட்சி 1789 முதல் 1799 வரை பினான்ஸில் நடந்த ஏழை எளியவர்களின் போராட்டத்தைக் குறிக்கிறது. குடியானவர்கள்
நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலங்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றி எளிய மக்களிடையே விநியோகித்தார்கள். நிலவுடைமையாளர்களில்
கொடுமைக்காரர்களின் தலைகளை கிலெட்டின் எனும் கருவியைக் கொண்டு துண்டித்தார்கள். ரத்தம் ஆறாக ஓடியது. சரியா?
பேராசிரியர்:  சரி தான். நன்றாகத் தான் வரலாற்றுப் பாடங்களை நினைவு வைத்திருக்கிறாய்.
கணேஷ்:  வரலாற்றில் இருந்து அல்ல. சார்லஸ் டிக்கன்ஸின் A Tale of Two Cities படித்ததில் இருந்து பிரஞ்சுப் புரட்சி என் மனதில் அப்படியே படிந்து போனது. 
பேராசிரியர்: அட! நீ பெரிய படிப்பாளின்னு தெரியாமப்  போச்சு. சரி...  இதைக் கவனி.  அதாவது இந்த புரட்சிக்கு முன்பு பிரான்ஸில் வறுமை தலைவிரித்து ஆடியது.  ஒரு பக்கம் தேவைக்கதிகமான செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் கொழித்தது. இன்னொரு பக்கம் சாப்பாட்டுக்கு வழியில்லாத எளியவர்கள் தவித்தார்கள்.  அவர்களில் ஒரு சாரார் துணிந்து ஒரு முடிவெடுத்தார்கள். ரயிலில் பயணிக்கும் கொழுத்த
பணக்காரர்களை வழிமறித்து அவர்களின் பணத்தையும் உடைமைகளையும் பிடுங்கிக் கொண்டார்கள்.  இந்த குற்றச்செயலுக்கு அப்போது வழக்கத்தில் புழங்கிய சொல் தான் echaquer. இச்சொல் லத்தீன் சொல்லான ejecter என்பதில் இருந்து வந்தது.
கணேஷ்: Eject என்றால் வெளியேற்றுறது தானே?
பேராசிரியர்: ஆமாம்.  விலங்குகள் வெளியேற்றும் கரியமில வாயுவை தாவரங்கள் பயன்படுத்துவதை plants utilize carbon dioxide ejected by animals எனலாம். திடீரென ஒரு விசயத்தை வெடித்து வெளிவிடுவதையும் 
eject எனலாம். The volcano ejected lava. விமானம் விபத்தாகும் முன் விமானி அதில் இருந்து குதித்து தப்பிப்பதையும் eject எனச்  சொல்வார்கள். கட்டாயமாய்  மனிதர்களை வெளியேற்றுவதையும் வேலையில் இருந்து ஒருவரை நீக்குவதையும் கூட இச்சொல்லால் குறிப்பார்கள். The protesting opposition MLAs were ejected from the assembly. I was ejected from office last week. 
கணேஷ்:  சரி... விசயத்துக்கு வாங்க. 
புரொபஸர்:  இந்த எஜெக்ட் என்பதில் இருந்து echaquer எனும் பிரஞ்சு சொல் தோன்றியது. பணக்காரர்களின் பொருட்களை வழிப்பறி பண்ணுவதற்கான
ஒரு சொல்லாக அது உருமாறியது.  பிரான்ஸில் அப்போது செயல்பட்ட ஆங்கில வழிப்பறி கொள்ளையர்கள் இதைப்  பின்னர் ஆங்கிலத்துக்கு கொணர்ந்த போது
அதை ஹைஜேக் என உச்சரித்தார்கள். அப்படி அது ஆங்கிலச் சொல்லாக மாறியது. 
கணேஷ்: ஓ....  ஹைஜேக்குக்கு பின்னால் இப்படி ஒரு புரட்சி வரலாறு இருக்கிறதா?
மீனாட்சி: இதெல்லாம் ஒரு புரட்சியா?
புரொபஸர்: தவிக்கும் எளிய மக்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் இதுவும் புரட்சி தான். 
கணேஷ்: சார் அதையெல்லம் விடுங்க, இந்த ஜிலெட் சவர பிளேட் இருக்கிறதே...
புரொபஸர்: ஆமாம் அதை 1855இல் தான் கண்டுபிடித்தார்கள். பிரஞ்சுப் புரட்சி முடிந்து அரை நூற்றாண்டு காலத்தில்.
கணேஷ்: அப்படீன்னா ஜிலெட் பிளேடால் ஷேவ் பண்ணும் நானும் ஒரு புரட்சியாளன் தானா?
புரொபஸர்: ஷட் அப்... இந்த guillotine எனும் கருவியை யார் கண்டுபிடித்தார் தெரியுமா?
கணேஷ்: யாராவது ஒரு பிரஞ்சு புரட்சியாளர்?
புரொபஸர்: அது தான் இல்ல. அதைக் கண்டுபிடித்தவர் ஒரு மருத்துவர்.
கணேஷ்: சம்பந்தமே இல்லியே?
புரொபஸர்:  இருக்குதே. ஆரம்பத்தில் இந்த கிலெட்டினை ரெண்டு விசயங்களுக்கு பயன்படுத்தினார்கள். காகிதங்கள் வெட்ட.  அப்புறம், டான்ஸில்ஸ்  அறுவைச் சிகிச்சையின் போது டான்ஸில்ஸ்  பகுதியை வெட்டி அகற்ற.
கணேஷ்: ஓ...
புரொபஸர்: Joseph-Ignace Guillotin எனும் மருத்துவர் இப்படி யோசித்தார்:  டான்ஸில்ஸை வெட்டி நீக்கியதும் நோயாளிக்கும் குணமாகி மகிழ்ச்சி கொள்கிறார். சமூகத்தின் பீடித்திருக்கும் நோயான நிலப்பிரபுக்களை இது போல் வெட்டி எறிய ஒரு பிரம்மாண்ட கருவியைக்  கண்டுபிடித்தால் என்ன?
அவரது பரிந்துரைகளின்படி புரட்சியாளர்கள் பிரம்மாண்ட டான்ஸில்ஸ் அறுவைச் சிகிச்சை கருவி ஒன்றை உருவாக்கினார்கள். அதைக் கொண்டு மொத்தம் 40,000 பேர்களின் தலையை வெட்டினர்.
கணேஷ்: அடக்கடவுளே!
புரொபஸர்:  இந்த அற்புதக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்காக அவர் பெயரையே அதற்கு வைத்தனர்.
மீனாட்சி: ஷட் அப். Stop this execution nonsense?
கணேஷ்: சார்...  ஒரு செயலை செய்து முடிப்பதும் execution.

புரொபஸர்:  ஒருத்தரை மரணதண்டனை மூலம் கொல்றதும் ங்ஷ்ங்ஸ்ரீன்ற்ண்ர்ய்.
கணேஷ்: அது எப்படி?
(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT