முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 134

நாய் ஜூலி humbled என்ற சொல்லின் வேறு பொருள்கள் பற்றி பேசுகிறது. கிரிக்கெட்டில் வர்ணனையில் humbled எப்படி பயன்படுகிறது எனத் தெரியுமா என கேட்கிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:42 PM
பகிர்:

நாய் ஜூலி humbled என்ற சொல்லின் வேறு பொருள்கள் பற்றி பேசுகிறது. கிரிக்கெட்டில் வர்ணனையில் humbled எப்படி பயன்படுகிறது எனத் தெரியுமா என கேட்கிறது.
கணேஷ்: இந்தியா தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் ஆட்டத்தொடரை வென்ற போது ஒரு பத்திரிகை எழுதியது: Saffers Humbled as the Indian Juggernaut Rolls On.

சர்வர்: அதென்ன நஹச்ச்ங்ழ்ள்?

கணேஷ்: நஹச்ச்ங்ழ்ள் என்றால் தென்னாப்பிரிக்கர்கள் என்று அர்த்தம். 

சர்வர்: அதென்ன அப்படி ஒரு பெயர்?

கணேஷ்: தெரியலையே? டிவியில அடிக்கடி நஹச்ச்ஹள் மற்றும் நஹச்ச்ங்ழ்ள் என வர்ணனையாளர்கள் பயன்படுத்திக் கேட்டிருக்கிறேன். 

புரொபஸர்: நான் சொல்றேன். South Africa என்பதோட முதல் சொல்லின் முதல் எழுத்து மற்றும் இரண்டாவது சொல்லின் முதல் இரு எழுத்துக்களையும் சேர்த்துப் பார்.

கணேஷ்: S + A + F. ஆமா Saf. 

புரொபஸர்: இதனுடன் விகுதியாக ஹள் சேர்த்து Saffers என்று புதுப்பெயர் ஒன்றை தென்னாப்பிரிக்கர்களுக்கு உருவாக்கினார்கள். கொஞ்சம் கொச்சையான விளையாட்டுத்தனமான ஒரு colloquial பயன்பாடு இது. 

சர்வர்: ஆஸ்திரேலியர்களை இது போல் Aussies என அழைப்பது நினைவுக்கு வருகிறது. 

புரொபஸர்: ஆமா. அதே போல் நியூசிலாந்தினரை ஓண்ஜ்ண்ள் என அழைக்கிறார்கள்.

சர்வர்: ஆமாம் நினைவுள்ளது. ஆனால் இதில் எனக்கு எப்போதும் ஐயம் உண்டு. அது ஏன் இவர்களுக்கு மட்டும் நாட்டுப் பெயருடன் தொடர்பில்லாத கிவி எனும் பெயர்?

புரொபஸர்: கிவிப்பறவை நியூசிலாந்து தேசத்துக்கே உரித்தானது. மிகப் பழமையான பறவையினம் ஒன்றின் தூரத்துச் சொந்தம் இது. Elephant Bird  கேள்விப்பட்டிருக்கிறாயா? மிக பிரம்மாண்டமான ராட்சத பறவை அது. 1000-1200 அஈயில் வாழ்ந்தது. இப்பறவை மனிதர்களின் குறுக்கீடு காரணமாய் அழிந்து போனது. கிவி பறவைக்கும் கிட்டத்தட்ட அதுவே நேர்ந்தது. மாவோரி போன்ற பழங்குடியினர் மட்டும் நியூசிலாந்தில் இருந்த காலத்தில் கிவி பறவை பாதுகாக்கப்பட்டது. ஏனென்றால் அம்மக்கள் இப்பறவையின் பாதுகாவலராய் தம்மைக் கருதினர். ஆனால் பின்னர் வெள்ளையர் நியூசிலாந்தை காலனி ஆதிக்கம் செய்யும் பொருட்டு வந்த போது கிவி பறவைகளைக் கண்டு வியந்தனர். பெரிய பறவை அது. பருத்து கொழுத்த உடல். பறக்க முடியாது. கொஞ்சம் மக்கு. அப்பறவையை மனிதர்கள் தீவிரமாய் அதுவரை வேட்டையாடினது இல்லை என்பதால் வெள்ளையர்களைக் கண்டு கிவி பறவைகள் அஞ்சி ஓடக் கூட முடியவில்லை. வெள்ளையர்கள் மரத்தில் இருந்து கனியைப் பறிப்பது போல் கிவி பறவைகளை கொத்து கொத்தாய் வேட்டையாடி தின்றனர். இந்த பறவையினம் அருகி கிட்டத்தட்ட அழியும் நிலை வந்த பின்னர் அந்த ஊர் அரசாங்கம் அதைப் பாதுகாக்க நிறைய முயற்சிகள் எடுத்தது. இன்னொரு பக்கம் பழங்குடி மக்களுக்கு கிவி பறவைகள் புனிதமானவை என்பதாலும் அப்பறவையை தேசிய பறவையாய் அறிவித்தனர். முதலாம் உலகப் போரில் இருந்து நியூசிலாந்து மக்களை கிவி என அழைக்கும் வழக்கம் பரவியது. 

சர்வர்: கிவி பறவைகளை அழித்தவர்களுக்கே இப்போது கிவிகள் என பெயர் ஏற்பட்டது வேடிக்கை தான். 

ஜூலி: Pommies தெரியுமில்லையா?

சர்வர்: இங்கிலாந்தினர் தானே?

ஜூலி: ஆமாம்

புரொபஸர்: ஆனால் அது derogatory word. அதாவது தரந்தாழ்த்துகிற, மனத்தைப் புண்படுத்தும் சொல்.
கணேஷ்: ரெண்டாயிரத்தில் ஆடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து வீரர்களை சிறுமைப்படுத்த என வேண்டுமென்றே இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்கள். 

புரொபஸர்: ஆமாம். முன்னாள் ஆஸி அணித்தலைவர் ஸ்டீவ் வாஹ் தன் சுயசரிதையான Out Of My Comfort Zoneஇல் இங்கிலாந்தினரை pommies என்று மட்டுமே குறிப்பிடுவார். எனக்கு நன்றாக நினைவுள்ளது.

ஜூலி: இதற்கு இணையான ஒரு தமிழ்ச்சொல் உண்டு.

கணேஷ்: நம்மவர்களுக்கு வெள்ளையர்கள் மேல் மரியாதை அதிகமாச்சே?

ஜூலி: ஆமாம். ஆனால் வெள்ளையர்களை வெறுத்த தேசிய போராளிகளும் இருந்தனரே...

கணேஷ்: ஆம் ஞாபகம் வந்திருச்சு. பரங்கி...

ஜூலி: கரெக்ட். இந்த பரங்கிக்கும் ஒரு பெயர்க்காரணம் உண்டு. இது பாரசீகத்தில் இருந்து தோன்றின சொல். ஃபிர் என்றால் பாரசீகத்தில் வேறு என்று அர்த்தம். ரங்க் என்றால் என்ன எனச் சொல் பார்ப்போம்?

கணேஷ்: ரங் தே பஸந்தி

ஜூலி: ஆமாம். நிறம். நம்மை விட மாறுபட்ட நிறம் கொண்டவர்கள் என்ற பொருளிலே ஃபி ரங்கி தோன்றி அது பரங்கி என திரிந்தது.

சர்வர்: சரி இங்கிலாந்து நாட்டு மக்களை வேறு எப்படி கெüரவமாய் அழைக்கலாம்?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.