முகப்பு
இளைஞர்மணி

அறிவியல் திரைப்படங்களுக்கு விருது: மாணவர்களும் பங்கேற்கலாம்!

அறிவியல் ரீதியாக சிந்திப்போம்; அறிவியல் ரீதியாக செயல்படுவோம் (Think Scientifically, Act Scientifically) என்ற முழக்கத்தோடு, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம்

இளைஞர்மணி

அறிவியல் திரைப்படங்களுக்கு விருது: மாணவர்களும் பங்கேற்கலாம்!

அறிவியல் ரீதியாக சிந்திப்போம்; அறிவியல் ரீதியாக செயல்படுவோம் (Think Scientifically, Act Scientifically) என்ற முழக்கத்தோடு, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம்

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

அறிவியல் ரீதியாக சிந்திப்போம்; அறிவியல் ரீதியாக செயல்படுவோம் (Think Scientifically, Act Scientifically) என்ற முழக்கத்தோடு, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம் விக்யான் பிரசார் (Vigyan Prasar). நாட்டின் அறிவியல் பரப்பும் (Science Popularization) திட்டங்களுக்கு உதவுவதே இதன் முக்கிய குறிக்கோள்.

திரைப்படங்கள் மூலம் அறிவியல் என்பதன் ஒருபகுதியாகத்தான் 9 ஆவது தேசிய அறிவியல் திரைப்பட விழா அடுத்த ஆண்டு  ஜனவரி 27 - ஆம் தேதி  முதல் 31} ஆம்  தேதி வரை சண்டீகரில் நடைபெறவுள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம், புதுமைகள், ஆற்றல், சுற்றுச்சூழல், மருத்துவம் மற்றும் வளர்ந்து வரும் அறிவியல், விவசாயம், பாரம்பரிய அறிவு ஆகியவற்றைப் பிரபலப்படுத்தும் திரைப்படங்களின் மூலம் சமூகம் வளர்வதை ஊக்குவிப்பது; அறிவியல் அறிஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களின் அறிவியல் முயற்சிகளை அங்கீகரிப்பது;   திரைப்படத் தயாரிப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வலர்கள் பரஸ்பரம் தொடர்புகொள்ள ஒரு மேடையை உருவாக்குவது;  அறிவியல் மற்றும் பொது பங்களிப்பில் குடிமக்களை ஊக்குவிப்பது ஆகியவையே தேசிய அறிவியல் திரைப்பட விழாவின் நோக்கங்களாகும்.

இந்த விழாவில் மேற்கண்ட கருத்தாக்கங்கள் கொண்ட ஆவணப்படங்கள், சித்திரப்படங்கள், புனைகதை படங்கள் ஆகியவற்றை படத் தயாரிப்பாளர்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் இடம் பெறச் செய்யலாம். இதில் Interface, Fusion, Out of the Box, Rainbow, Spontaneous என்ற 5 போட்டிப் பிரிவுகளில் இந்தியப் படங்கள் பங்கேற்கலாம். Beyond Boundaries என்ற போட்டியற்ற பிரிவில் அயல்நாட்டு திரைப்படங்களைத் திரையிடலாம். 

Interface பிரிவில் அரசு மற்றும் அரசு சாரா கல்வி நிறுவனங்கள் அல்லது அமைப்புகளால் நிதியளிக்கப்பட்ட  படங்களை 40 நிமிட கால அளவுக்குள் திரையிடலாம். Fusion பிரிவில் தனிப்பட்ட நபர் அல்லது தயாரிப்பு நிறுவனங்களின் படங்களை 40 நிமிடங்களுக்கு திரையிடலாம். Out of the Box பிரிவில் கல்லூரி மாணவர்களின் அறிவியல் திரைப்படங்களை 15 நிமிட கால அளவுக்குள் திரையிடலாம். Rainbow பிரிவில் 6 முதல் 12}ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் 10 நிமிட கால அளவில் தங்கள் படங்களை இடம்பெறச் செய்யலாம். Spontaneous பிரிவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். இந்த படத்தை 5 நிமிடங்கள் கொண்டதாக விழாவின் போது அளிக்கப்படும் கருவைக் கொண்டு விழா வளாகத்திலேயே உருவாக்க வேண்டும். 

இவற்றில் சிறந்த விழா விருதுக்கு (Best of Festival Award) தேர்வாகும் ஒரு படத்துக்கு விருது மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மற்ற அனைத்துப் பிரிவுகளில் வெற்றி பெறும் படங்களுக்கு விருது, கோப்பை, சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

Interface மற்றும் Fusion பிரிவுகளில் முதலிடம் பெறும் படங்களுக்கு தங்க நீர்நாய் (Golden Beaver) விருது, தலா ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசு, இரண்டாமிடம் பெறும் படங்களுக்கு வெள்ளி நீர்நாய் விருது மற்றும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெறும் படங்களுக்கு வெண்கல நீர்நாய் விருது மற்றும் ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

Out of the Box  பிரிவில் முதலிடம் பெறும் படத்துக்கு தங்க நீர்நாய் விருதுடன், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு, இரண்டாமிடம் பெறும் படத்துக்கு வெள்ளி விருதுடன், ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெறும் படத்துக்கு வெண்கல விருதுடன், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தஹண்ய்க்ஷர்ஜ் பிரிவில் முதலிடத்துக்கு தங்க நீர்நாய் விருதுடன், ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசு, இரண்டாமிடத்துக்கு வெள்ளி விருதுடன், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு, மூன்றாமிடத்துக்கு வெண்கல விருதுடன் ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பரிசு, நல்ர்ய்ற்ஹய்ங்ர்ன்ள் பிரிவில் வெற்றி பெறும் ஒரு படத்துக்கு விருது, பதக்கம், சான்றிதழுடன், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இவையல்லாமல், ஆராய்ச்சி, கதை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் வடிவமைப்பு, படத்தொகுப்பு, வரைகலை/சித்திரப்படம்/சிறப்பு ஒளி, ஒலி அமைப்பு ஆகிய 6 பிரிவுகளில் தொழில்நுட்பத்துக்கான சிறப்பு விருதாக தலா ஒரு பதக்கம், கோப்பை, சான்றிதழ், ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பரிசு (மொத்தம் ரூ. 1.8 லட்சம்) வழங்கப்பட உள்ளது. மேலும், நீதிபதிகளின் சிறப்பு குறிப்பு விருது(கள்) (Jury Special Mention Award-ள்) பெறும் படத்துக்கும் பதக்கம், சான்றிதழ் ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். 

போட்டியில் பங்கேற்கும் படங்கள் 2017, நவம்பர் முதல் தேதிக்குப் பிறகோ, 2018, அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்போ தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை. ஆங்கிலத்தைத் தவிர்த்து பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் ஆங்கில துணைத் தலைப்புகளுடன் இருக்க வேண்டும். 

போட்டியில் பங்கேற்போர் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் இணையம் வழியாகப் பதிவுசெய்ய வேண்டும். படங்கள் இடம்பெற்ற டிவிடி / பென்}டிரைவ் போன்றவற்றை வரும் நவம்பர் 5-ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ நொய்டா முகவரியில் சேர்க்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களை ஜ்www.vigyanprasar.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது nsff.vp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →