வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 153
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள்.
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே ஒரு மீசைக்காரரும் நடாஷா எனும் பெண்ணும் இருக்கிறார்கள்.
புரொபஸர் (நடாஷா): நடாஷா
நடாஷா: யெஸ்
புரொபஸர்: எவ்வளவு அழகான பெயர் உன்னுடைய பெயர்...
நடாஷா: It’s a common name
புரொபஸர்: no it isn't. Quite uncommon, kind of remarkable name.
நடாஷா: உஸ்ஸ்! (ஜூலியிடம்) Is the old man trying to flirt now?
ஜூலி: புரொபஸர் எல்லாத்தையும் மிகையா, ஓவர் இமோஷனலா பார்க்கிறவர். அவரால் எப்படி flirt பண்ண முடியும்?
நடாஷா: Why not?
ஜூலி: அவர் கண்ணுக்கு மனுஷங்களை விட மனுஷங்களைப் பற்றின செய்திகள், கருத்துக்கள், பார்வை தான் முக்கியம்.
நடாஷா: No chance. I know …. All men are flirts. சரி பெட்? ஒகெவா?
ஜூலி: பெட் நடாஷா (புரொபஸரிடம்): சார், ஏன் என் பெயர் உங்களுக்குப் பிடிச்சிருக்கு? இல்லை என்னை உங்களுக்கு பிடிச்சதனால என் பெயர் பிடிச்சிருக்கா?
புரொபஸர் (கண்ணாடியை கழற்றி மாட்டியபடி): நடாஷான்னு பெயர் கேட்டாலே எனக்கு நினைவுக்கு வர்றது இரண்டு நாவல்கள்: ஒன்று, தல்ஸ்தாயின் War and Peace; இன்னொன்று தஸ்தாவஸ்கியின் Humiliated and Insulted. War and Peace இல் வரும் நடாஷா உலகின் தலைசிறந்த பாத்திரப் படைப்பு என்கிறார்கள் விமர்சகர்கள். தஸ்தாவஸ்கியின் நாவலில் வரும் நடாஷாவும் சுபாவத்தைப் பொறுத்தமட்டில் தல்ஸ்தாயின் பாத்திரத்துக்கு மிக இணக்கமானவள். ரெண்டு பேரையும் பற்றி நினைக்கையில் என் மனத்துக்கு வரும் சொற்கள் இவை: unabashed and uninhibited.
நடாஷா: அடப்பாவி!
புரொபஸர்: ஏம்மா?
நடாஷா: நானெல்லாம் ஒரு பொருட்டில்லையா?
புரொபஸர்: மனிதர்களின் அழகே அவர்களைப் பற்றின அல்லது அவர்களின் பெயர் ஏற்படுத்தும் நினைவுகள் தாம்.
கணேஷ்: சார், bash என்றால் அடித்து மூஞ்சியை பெயர்ப்பது தானே?
புரொபஸர்: யெஸ். Strike, smack, pummel, thrash ஆகியவற்றுக்கும் அதே அர்த்தமே. இதன் இன்னோர் அர்த்தம் belittling somebody. அதாவது ரொம்பவும் ஒருத்தரை மட்டம் தட்டி பேசுவது. ஆனால் unabashed என்றால் எதிர்காலக் கவலைகள் இன்றி, தான் செய்யும் செயல்களுக்கு விமர்சனம் வருமா என அஞ்சிடாமல் வெளிப்படையாக மகிழ்ச்சியாக இருப்பது. ஒருவித குழந்தைத்தனமான துணிச்சல். அதே போல துணிச்சலாய் தன் ஆதரவை வெளிக்காட்டுவதற்கும் இதைச் சொல்லலாம்.
புரொபஸர்: ஓ... சரிதான். ஐ ஆம் சாரி. சரி, abashed என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கியா?
ஜூலி: அதிகம் புழக்கத்தில் இல்லாத சொல் இல்லையா?
புரொபஸர்: ஆம். Bashed மற்றும் unabashed ரொம்ப பழைய ஆங்கிலச் சொற்கள். 14ஆம் நூற்றாண்டில் bashed புழக்கத்தில் இருந்தது. சங்கடப்படுவது, அசிங்கமாய்... அவமானமாய் உணர்வது என்னும் அர்த்தம் அதற்கு. இதற்கு நேரெதிரான அர்த்தத்தில் பின் unabashed புழக்கத்துக்கு வந்தது. இதன் பிறகு கடந்த ஆறு நூற்றாண்டுகளாய் unabashed பயன்பாட்டில் இருக்கிறது. சங்கடத்தை குறிக்கும் அதன் மூலச் சொல் செத்து விட்டது. எப்போதுமே எதிர்மறைச் சொற்களுக்கு ஆயுசு கெட்டி. இதை ஒட்டிய இன்னொரு சொல் brazen.
நட்டாஷா: யெஸ். எனக்கு க்ஷழ்ஹக்ஷ்ங்ய் என்றதுமே நினைவுக்கு வருவது பேட்மேன் படத்தில் வரும் ஜோக்கர்.
புரொபஸர்: Yes he is brazenly evil and unapologetically cruel.
கணேஷ்: Unapologetic என்றால் வெட்கமே இன்றி என அர்த்தமா சார்?
புரொபஸர்: இல்லை; சிலருக்கு தாம் செய்வது குற்றம் எனத் தெரிந்தாலும் அதை பொருட்படுத்தி மன்னிப்பு கோர மாட்டார்கள். "ஆமாடா அப்படித் தான் பண்ணுவேன். நீ என்ன பண்ணுவே இப்போ?' என கெத்தாக தப்பு செய்வார்கள். அதுவே brazen. Brass (பித்தளை) என்பதில் இருந்து brazen தோன்றியது. பித்தளை போன்ற முகம் கொண்டவர் என உருவகரீதியாய் சொல்லலாம்.
(இனியும் பேசுவோம்)