இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 129 

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிடச் சென்ற உணவகத்தில் அங்கு அவர்கள் சந்திக்கும் சர்வரிடம் ஜூலி சில கேள்விகள் கேட்கப் போவதாகவும், அதில் குறைந்தது மூன்று கேள்விகளுக்காவது அவன் சரியாகப் பதிலளிக்காவிட்டால் அவனது காதலி ராக்கியின் தலை வெடித்து சிதறி விடும் என கூறுகிறது. சர்வர் சவலை ஏற்கிறான். 
ஜூலி: முதல் மூன்று கேள்விகளில் ஆட்டம் டிரா. ஸ்கோர் பூஜ்யம். ஆனால் நான்காவது கேள்வியில் நீ தோத்துட்டே. அதனால் உனக்கு இக்கேள்வி ரொம்ப முக்கியம். கவனமாய் கேள்.
சர்வர்: ரைட் ஓகே. (மொபைல் போன் அடிக்கிறது. அவன் போனை எடுக்கிறான்) ஹை ஜாக்கி. சொல்லு டார்லிங். ஏ.. என்ன... இல்ல இரு. அப்படி இல்ல. ஹலோ ஏன் இப்படியெல்லாம் சொல்றே. எனக்கு கோவம் வந்தா என்னாகும் தெரியுமில்ல. ஸ்டாப் இட். You bitch... 
(அவன் போனில் கத்தியபடி அங்கிருந்து நீங்குகிறான்.)
கணேஷ்: என்னாச்சு?
ஜூலி: He is giving her a piece of his mind.
கணேஷ்: Piece ஆ?
ஜூலி: அதாவது ஒருத்தர் நம்மை தினமும் நச்சரித்து கடுப்பேற்றுகிறார். நாம் நமது அன்பின் பொருட்டு அல்லது எதற்கு வம்பு என அமைதியாய் பொறுத்துப் போகிறோம். ஒரு தருணத்தில் சட்டென பொறுமை இழந்து மனத்துக்குள் அதுவரை பொருமிக் கொண்டிருந்த கோபத்தை வெளிக்காட்டுகிறோம். அது தான் giving someone a piece of mind.அவன் இப்போ அவன் காதலி ஜாக்கிக்கு இப்போ கொஞ்சம் தன் உண்மை சொரூபத்தை காட்டிக் கொண்டிருக்கிறான்.
கணேஷ்: Is it different from "tell someone off''?
ஜூலி: நல்ல கேள்வி. ஒருவர் செய்வது தவறு என உணர்ந்து அதைக் கண்டிப்பது தான் telling someone off.
(சர்வர் கோபமாய் திரும்ப வருகிறான்: அவளுக்கு நான் ஒரு பாடம் கற்பிக்கிறேன். திமிரெடுத்து அலைகிறாள்.)
ஜூலி: என்னாச்சு?
சர்வர்: ஒன்றுமில்லை. நீ கேள்வி கேளு. ரொம்ப சிரமமான கேள்வியா கேளு. இது தான் கடைசிக் கேள்வி. இதோட அவள் தலை வெடிக்கணும்.
ஜூலி: நீ என்னை தர்மசங்கடமான நிலைமையில் தள்ளுகிறாய். நான் எப்படி வேண்டுமென்றே அப்படி...
சர்வர்: ப்ளீஸ்... 
ஜூலி: சரி. இதோ கேள்வி: நாம் திரும்பத் திரும்ப சில வார்த்தைகளை ஒரு வாக்கியத்தை தொடங்குவதற்காக பயன்படுத்துவோம். தமிழில், "அதாவது', "என்னவென்றால்', "ஆனால்'. ஆங்கிலத்தில் actually, honestly, basically. இம்மாதிரியான சொற்களை என்னவென அழைப்பார்கள்?
சர்வர்: தெரியலையே
ஜூலி: Crutch words. ஒரு வாக்கியத்தை ஆரம்பிக்க 
ஊன்றுகோல் போல் இச்சொற்கள் பயன்படுவதால் crutch words என பெயர்.
சர்வர்: அடடா சூப்பர்... அப்படி என்றால் நான் தோற்று விட்டேனா?
ஜூலி: ஆமா
சர்வர்: அவள் தலை இந்நேரம் வெடித்திருக்குமா?
ஜூலி: அடப் போப்பா சும்மா விளையாட்டுக்கு சொன்னா சீரியஸா எடுத்துக்கிறதா? தலையும் வாலும் பத்திரமாவே இருக்கும்.
சர்வர்: அடச்சே. சரி நான் போறேன். பக்கத்து டேபிளில் கஸ்டமர் வந்திட்டாங்க. ஆர்டர் எடுக்கப் போகணும். பை.
ஜூலி: பை
சர்வர் (திரும்ப வந்து): அதுக்கு முன்னால் ஒன்று. மேஜிக் தெரியாவிட்டால் எப்படி என் காதலி பெயர் அவ்வளவு துல்லியமாய் தெரியும் உனக்கு?
ஜூலி: அதான் உன் முழங்கைக்கு கீழே அதை பச்சை குத்தி வச்சிருக்கியே. கீழே இருந்து பார்த்தா துல்லியமா தெரியுதே.
சர்வர்: அடச்சே (அவன் போகிறான்)
ஜூலி: ஹா... ஹா...
கணேஷ்: ஏன் சிரிக்கிறே? பாவமில்லையா அவன்!
ஜூலி: அதுக்கு சிரிக்கல நான்
கணேஷ்: பின்னே?
ஜூலி: கஸ்டமர் என்ற சொல்லுக்கு அர்த்தம் வாடிக்கையாளர் என்பது.
கணேஷ்: ஆமா
ஜூலி: ஆனால் பழங்கால ஆங்கிலத்தில் இதற்கு இன்னொரு பொருள் இருந்தது
கணேஷ்: என்னது?
ஜூலி: விலைமாது
கணேஷ்: என்னது நிஜமாவா?
ஜூலி: யெஸ் ஷேக்ஸ்பியர் தன் நாடகங்களில் அந்த அர்த்தத்தில் தான் கஸ்டமர் என்பதைப் பயன்படுத்துகிறார். இதெப்படி?
கணேஷ் சிரிக்கத் தொடங்குகிறான். ஜூலி அவனை அமைதிப்படுத்துகிறது: 
ஜூலி: சிரிக்காதே
கணேஷ்: இல்ல... அவன் கஸ்டமரை கவனிக்கப் போனதை நினைச்சுத்தான்
ஜூலி: ச்சூ... உனக்கு ஒண்ணு தெரியுமா? இந்த சொல்  customarious எனும் லத்தீன் சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருள் "கையாள வேண்டிய நபர்'. வாடிக்கையாளன் என்பவன் ஒரு வர்த்தகப் பரிமாற்றத்தில் கையாளப்பட வேண்டியவன் அல்லவா? அப்படித் தான் customer என்ற சொல் உருவாகியது.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT