இளைஞர்மணி

குப்பைகளுக்காக ஒரு செயலி!

மக்கள் தொகை பெருகுவது போல் குப்பைகளின் அளவும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குவியும் குப்பைகளாலும் அவற்றை அப்புறப்படுத்தாமல் இருப்பதாலும் சுற்றுச்சூழல்  மாசடைகிறது.

வனராஜன்

மக்கள் தொகை பெருகுவது போல் குப்பைகளின் அளவும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குவியும் குப்பைகளாலும் அவற்றை அப்புறப்படுத்தாமல் இருப்பதாலும் சுற்றுச்சூழல் மாசடைகிறது. சுற்றுச்சுழலை தூய்மைப்படுத்தும் முயற்சியில் Trash man Greentechnology என்ற அமைப்பைச் சேர்ந்த பொறியியல் பட்டம் பெற்ற ஐந்து இளைஞர்கள் (சாந்தாராம், உதயாகுமார், கிங்ஸி, திவாகர், விஜய்) இந்த குப்பைகளை அப்புறப்படுத்துவதை சமூக நோக்குடன் செய்து வருகிறார்கள். இது பற்றி அவர்களிடம் பேசினோம்:

""சென்னையில் நாள் ஒன்றுக்கு 5400 டன் குப்பை சேருகிறது. இவ்வாறு சேரும் குப்பையில் தினமும் 429 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கிடைக்கின்றன. உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், தண்ணீர் பாக்கெட்கள், தண்ணீர்பாட்டில்கள், சி.டிக்கள் என்று பலவிதமான பிளாஸ்டிக் கழிவுகள் குப்பையோடு குப்பையாக வருகின்றன. குப்பையில் பிளாஸ்டிக் கழிவு சேர்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குப்பையில் சேரும் 40 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுவதில்லை. கையாளப்படாமல் சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 171.6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தில் கொட்டப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பலவித ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நிலத்தடிக்குள் மழை நீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வருங்காலத்தில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் பிளாஸ்டிக் குப்பையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை இருந்த போதிலும் தண்ணீர் பாக்கெட்டில் தொடங்கி, கேரி பேக் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டில்உள்ளது.

சென்னை நகரை சுகாதாரமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எங்களுடைய குப்பை சேகரிக்கும் Trash man செயலி திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்து இருக்கிறோம். அதுவும் வீட்டில் சேரும் குப்பையை வீட்டிற்கே தேடிச் சென்று வாங்கிக் கொள்கிறோம். அவர்களின் கண்முன் தரம் பிரிக்கிறோம். மக்கும் குப்பைகளை அவர்களிடம் கொடுத்துவிடுகிறோம். மக்காத பிளாஸ்டிக் குப்பை, எலக்ட்ரானிக் கழிவுகள், சமையல் பாத்திரங்கள், போர்டுகள், போன்றவற்றை எடை போட்டு அதற்கான பணத்தை அவர்களிடம் கொடுத்துவிடுவோம். உங்களிடம் நாங்கள் குப்பைகளை வாங்க வேண்டுமென்றால் எங்களுடைய trashman app- இல் பதிவிறக்கம் செய்து அதில் உள்ள விவரங்களை நீங்கள் தெரிவித்தால்போதும்.

அதாவது குப்பை சேகரிக்க வேண்டிய முகவரி, என்ன வகை குப்பை உள்ளது, அதனை நாங்கள் எந்த நேரத்தில் பெற்று கொள்வது போன்ற விவரங்கள் தாம் அவை. எங்களுடைய இந்தச் செயலி 2019 ஜுலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது தென் சென்னையில் குப்பைகளை சேகரித்து குப்பை இல்லாத மண்டலமாக மாற்றியுள்ளோம்.

எங்களுடன் இந்த திட்டம் பரவலாகப் பேசப்பட்டதையடுத்து, பொறியியல் பட்டதாரிகள் சிலரும் எங்களுடன் கைகோர்க்க முன் வந்து இருக்கிறார்கள். தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளில் செயல்படுத்தப்படும் எங்களுடைய இந்த திட்டத்தை இனி வரும் காலங்களில் சென்னை முழுக்க செயல்படுத்த முயற்சி செய்வோம்'' என்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT