முகப்பு
இளைஞர்மணி

மிச்​ச​மெல்​லாம்  உச்​சம் தொடு - 65: கிருமி சிந்​தித்​தால் அழிவு... மனி​தன் சிந்​தித்​தால் வாழ்வு!

1960 - களின் பிற்​ப​கு​தி​யில், இந்​தியா பல அத்​தி​யா​வ​சிய மருத்​து​வத் தேவை​க​ளுக்​கான மொத்த மருந்​து​க​ளுக்கு இறக்​கு​ம​தியை மட்டுமே பெரி​தும் நம்​பி​யி​ருந்​தது. மருந்து இறக்​கு​ம​தி​யி​னால் அந்​ந

Updated On : 21 ஏப்ரல், 2020 at 6:53 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:59 PM

1960 - களின் பிற்​ப​கு​தி​யில், இந்​தியா பல அத்​தி​யா​வ​சிய மருத்​து​வத் தேவை​க​ளுக்​கான மொத்த மருந்​து​க​ளுக்கு இறக்​கு​ம​தியை மட்டுமே பெரி​தும் நம்​பி​யி​ருந்​தது. மருந்து இறக்​கு​ம​தி​யி​னால் அந்​நி​யச் செலா​வணி அதி​க​மாக குறைந்து நமது நாட்டின் வளர்ச்​சியை மிக​வும் பாதித்​தது. தயா​ரிப்பு காப்​பு​ரி​மைச் சட்ட முறை 20 -ஆம் நூற்​றாண்​டின் ஆரம்​பத்​தில் அப்​போ​தைய பிரிட்​டிஷ் ஆட்சி​யா​ளர்​க​ளால் முதன்​மை​யாக தங்​கள் நிறு​வ​னங்​கள் மற்​றும் தயா​ரிப்​பு​க​ளின் நல​னுக்​காக நிறு​வப்​பட்​டது. இத​னால் இந்​திய உற்​பத்​தி​யா​ளர்​கள் நம் மக்​க​ளுக்​காக மருந்து தயா​ரிப்​ப​தைத் தடை​செய்​தார்​கள். அதோடு நமக்கு அந்த மருந்​து​களை உற்​பத்தி செய்​யும்திற​னும், திற​மை​யும் இல்லை என்ற நிலை. இதன் விளை​வாக, மருந்து உற்​பத்​தித்​து​றை​யில் உலக நிறு​வ​னங்​க​ளோடு போட்டி​யும்இல்​லா​த​தால், மருந்தின் விலை மிக அதி​க​மா​னது. இன்​றைக்​கும் அதே நிலை​மை​தான்.

நக​ரங்​க​ளைத் தாண்டி கிரா​மங்​க​ளுக்கு மருத்​து​வம் சென்​ற​டை​ய​வில்லை. இதன் விளை​வாக, 1960 -களில் இந்​தியா தனது ~ 55 கோடி இந்​திய மக்​க​ளுக்கு மலிவு விலை மருந்து வழங்க முடி​ய​வில்லை.

1972 - ஆம் ஆண்​டில் காப்​பு​ரி​மைச் சட்டத்தை அர​சாங்​கம் திருத்தி (காப்​பு​ரி​மைச் சட்டம் - 1970), மருந்​து​க​ளுக்​கான உலக தயா​ரிப்பு காப்​பு​ரி​மையை இந்​தி​யா​வில் ரத்து செய்​தது. 1972 - க்குப் பிறகு தான்இந்​திய மருந்து உற்​பத்​தி​யா​ளர்​கள் திரும்பக் கண்​ட​றி​யும் பொறி​யி​யல் (Reverse Engineering) நுட்​பத்​தின் மூலம் மருந்து உற்​பத்தி இந்​தி​யா​வில் ஊக்​கப்​ப​டுத்​தப்​பட்​டது. மேலும் மலி​வான, ஆனால் உயர்​தர மொத்த மருந்​து​க​ளைத் தயாரிப்​ப​தற்​கான உள்​நாட்டு தொழில்​நுட்​பங்​களை உரு​வாக்கி, பின்​னர் பல்​வேறு மருந்து உரு​வாக்​கும் வழி​மு​றை​களை வடி​வ​மைப்​ப​தில் இந்​திய மருந்து உற்​பத்​தி​யா​ளர்​கள் தேர்ச்சி பெற்​ற​னர். அது மட்டு​மல்​லா​மல், 1950-60 -களில் இறக்​கு​மதி சார்ந்த மருந்து தொழில்​து​றை​யி​லி​ருந்து, ஒவ்​வொரு நாட்டிற்​கும் தர​மான மருந்தை ஏற்​று​மதி செய்​வ​தன் மூலம், அசல் விலை​யின் பத்​தில் ஒரு பங்​கிற்​கும் குறை​வான விலை​யில், பொது​வான விலைக்​கான மருந்து ஏற்​று​ம​தி​யில் உல​கத் தலை​வ​ராக உரு​வெ​டுத்​துள்​ளது மற்​றும் குறைந்த விலை​யில் உயர்​தர மருத்​து​வத்​திற்​கான உல​க​ளா​விய நற்​பெ​ய​ரைப் பெற்​றது இந்​தியா. இன்று, இந்​திய மருந்​துத் தொழில் உல​கம் முழு​வ​தும் பொது சுகா​தா​ரத்தை, மருத்​து​வத்தை மேம்​ப​டுத்​து​வ​தில் குறிப்​பி​டத்​தக்க பங்​க​ளிப்​பைச் செய்து வரு​கி​றது.

Advertisement

உல​கில் மூன்​றா​வது பெரிய மருந்து உற்​பத்​தி​யா​ள​ராக இந்​தியா உரு​வா​கி​யி​ருக்​கி​றது. மருந்து உற்​பத்​தி​யில் உல​கின் முன்​னனி நாடாக மாறிய இந்​தி​யா​விற்கு அதற்​கான முழு​மை​யான விதை போடப்​பட்ட ஆண்டு 1972.

ஆ​னால் புதிய மருந்து கண்​டு​பி​டிப்பு ஆராய்ச்​சி​யில் இந்​தி​யா​வின் நிலை எங்கே இருக்​கி​றது? இது ஒரு மிகப்​பெ​ரிய கேள்​விக்​குறி. கார​ணம், அடிப்​படை அறி​வி​யல் ஆராய்ச்​சிக்​கும் மேம்​பாட்​டிற்​கும் இந்​தியா மதிப்​ப​ளிக்​கா​த​தி​னால் ஏற்​பட்ட நிலை​யி​னால், நாம் அறி​வி​யல் கண்​டு​பி​டிப்​பில் பின்​தங்கி இருக்​கி​றோம். மொத்த மருந்​து​கள் மற்​றும் மருந்து உரு​வாக்​கும் சூத்​தி​ரங்​க​ளுக்​கான உற்​பத்தி தொழில்​நுட்​பத்தை உரு​வாக்க, தலை​கீழ் பொறி​யி​ய​லில் (Reverse Engineering) இந்​தியா சிறந்து விளங்க முடி​யும் என்​றா​லும், புதிய மருந்து கண்​டு​பி​டிப்​பில் இந்​தியா போது​மா​ன​தாக செய்ய முடி​ய​வில்லை.

​அ​லோ​பதி மருந்​தைக் கண்​டு​பி​டிக்க என்ன செய்ய வேண்​டும்? பல்​வேறு நிலை​க​ளைத் தாண்​டி​தான் கண்​டு​பி​டிக்​கப்​பட்ட அலோ​பதி மருந்து சந்​தைக்கு வர​வேண்​டும். இதில் மருந்து கண்​டு​பி​டிக்க (Dis​covery) நீண்ட காலம் ஆகி​றது. அதா​வது 10 முதல் 14 ஆண்​டு​கள், அடுத்து இன் விட்ரோ (In-vitro) ஆய்வு, முன்​கூட்​டிய மருத்​துவ ஆய்வு (Pre-​clini​c​al study) மற்​றும் மருத்​துவ ஆய்வு (Clini​c​al Study in Phase 1 - 4). ஓர் அலோ​பதி மருந்​தைக் கண்​டு​பி​டிக்க ஆயி​ரக்​க​ணக்​கான வேதி​யி​யல் செயற்கை மூலக்​கூ​று​க​ளின் கல​வை​யில் இருந்து அல்​லது ஹெர்​பல் மூலக்​கூ​று​க​ளின் கல​வை​யில் இருந்து ஒற்றை மூலக்​கூ​றைப் பிரித்து எடுத்து, அது அந்த வியா​தியை குணப்​ப​டுத்​தக்​கூ​டிய மூலக்​கூ​றாக இருக்​க​வேண்​டும் என்று கண்​டு​பி​டிப்​பது (Dis​covery St​age) தான் மருந்​தைக் கண்​டு​பி​டிக்​கும் முதல் முறை.

​வி​யா​தி​யைக் குணப்​ப​டுத்​தும் ஒற்றை மூலக்​கூறை கண்​டு​பி​டித்த பின்பு இதை இன்-​விட்ரோ முறைப்​படி இது கிரு​மியை அழித்து வியா​தி​யைக் குணப்​ப​டுத்​துமா என்று ஆய்​வ​கத்​தில் வைத்து நடை​பெ​று​வதை (Pre-​Clini​c​al St​age) முன்​கூட்​டிய மருத்​துவ ஆய்வு என்​கி​றார்​கள். இதற்கு அடுத்து, விலங்கு ஆய்​வு (Anim​al Study), இன்-​வை​வோ (In-​Vivo) என்று சொல்​கி​றார்​கள்; இந்த மருந்தை எலி, எலி​கள், கினிப் பன்​றி​கள், நாய்​கள் போன்ற விலங்​கு​க​ளுக்கு மனி​தர்​க​ளுக்கு கொடுக்​கும் மருந்​தின் அள​வை​விட 10 மடங்கு அதி​க​மாக கொடுத்து அதில் விலங்​கிற்கு பாது​காப்​பும் (S​afety), மருந்​தின் செய​லாக்க தன்​மை​யும் (Effi​c​a​cy) ச​ரி​யாக இருக்​கி​றதா என்று விலங்​கு​க​ளுக்கு கொடுத்​துப் பார்ப்​பது.

​இந்த இரண்டு Pre-​Clini​c​al Study ஆய்​வக நிலைக்கு முந்​தைய நிலை ஆராய்ச்சி முடிந்​த​வு​டன் தான் முதல் நிலை (Ph​ase-1 - S​afety) ஆய்வு ஆரம்​பிக்​கப்​ப​டு​கி​றது. இதில் கண்​டு​பி​டிக்​கப்​பட்ட அலோ​பதி மருந்தை நல்ல உடல் நலம் உள்ள தன்​னார்​வ​லர்​க​ளுக்கு கொடுத்து அவர்​க​ளது உடல் நலத்​தின் பாது​காப்பு (S​afety) எப்​படி இருக்​கி​றது, வேறு ஏதும் பக்க விளை​வு​களை உரு​வாக்​கு​கி​றதா என்று ஆய்வு செய்​வது. இதை அடுத்து இரண்​டாம் நிலை மற்​றும் மூன்​றாம் நிலை ஆய்வு. இதில் அலோ​பதி மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்து நோயின் தன்​மை​யில் இருந்து அவர்​களை இந்த மருந்து எவ்​வாறு காக்​கி​றது (Effi​c​a​cy), அவர்​க​ளுக்கு உடல் பாது​காப்​பில் எப்​படி செயல்​ப​டு​கி​ற​து (Safety), வேறு ஏதும் பக்​க​வி​ளை​வு​கள் இருக்​கி​றதா என்​பதைக் கண்​ட​றி​வது. இரண்​டாம் நிலை ஆய்​வில் (Ph​ase-2 - S​afety and Effi​c​a​cy) 100 முதல் 300 வரை​யி​லான நோயா​ளி​க​ளுக்கு கொடுத்து ஆய்வு செய்​யப்​ப​டும். இதை அடுத்து மூன்​றாம் நிலை ஆய்​வில் (Ph​ase-3 - S​afety and Effi​c​a​cy), இதில் 1000 முதல் 3000 வரை​யி​லான நோயா​ளி​க​ளுக்கு அலோ​பதி மருந்தை கொடுத்து ஆய்வு செய்​யப்​ப​டும்.

​இதை அடுத்து நான்​காம் நிலை ஆய்வு (Ph​ase-2 - S​afety and Effi​c​a​cy from So​ciety after laun​ch) மருந்தை நோயா​ளி​க​ளுக்கு கொடுக்​க​லாம் என்று அறி​வித்து மருத்​து​வர்​க​ளுக்​குக் கொடுத்து நோயா​ளி​க​ளுக்கு பரிந்​துரை செய்​யும் சந்​தைப்​ப​டுத்​து​த​லுக்​குப்​பின், இது சமூ​கத்​தில் எவ்​வாறு பாது​காப்​பை​யும், நோய் குறைப்பு அல்​லது அழிப்​பில் செயல்​ப​டு​கி​றது என்று செய்​யப்​ப​டும் ஆய்வு.

​இந்த 4 நிலை ஆய்​வு​களை முடித்து ஓர் அலோ​பதி மருந்து வெற்​றி​க​ர​மாக சந்​தைக்கு கொண்​டு​வ​ரப்​ப​டும். ஓர் அலோ​பதி மருந்து கண்​டு​பி​டிப்பு என்​பது வெறும் மருத்​துவ அறி​வி​யல் ஆராய்ச்சி நிபு​ணத்​து​வம், புது மருந்து கண்​ட​றி​யும் திறன் அல்​லது படைப்​பாற்​றல் மட்டும் பற்​றி​யது அல்ல, சுமார் 10-14 ஆண்​டு​க​ளில் சுமார் ரூ 4,000-ரூ.6,000 கோடி வரை முத​லீடு தேவைப்​ப​டு​கி​றது. எனவே மருத்து கண்​டு​பி​டிக்​கும் மேற்​கண்ட அனைத்​துப்படி நிலை​க​ளி​லும் எந்த கட்டத்​தி​லும் தோல்வி ஏற்​ப​ட​லாம். இத​னால் முத​லீட்டு இழப்பு ஏற்​ப​டும் என்ற மிகப்​பெ​ரிய ஆபத்து உள்​ளது.

அ​னைத்து முன்​கூட்​டிய மற்​றும் மருத்​துவ ஆய்​வு​க​ளை​யும் வெற்​றி​க​ர​மாக முடித்து, மக்​க​ளுக்கு பக்​க​வி​ளை​வு​கள் இல்லை என்று நிரூ​பிக்​கப்​பட்ட மருந்​து​கள் கூட, பல ஆண்​டு​கள் மருத்​துவ பயன்​பாட்​டிற்​குப் பிறகு, பாது​காப்பு கார​ணங்​க​ளால் திரும்​பப் பெறப்​பட்ட பல எடுத்​துக்​காட்​டு​கள் உள்​ளன. எடுத்​துக்​காட்​டாக, ஐரோப்​பா​வி​லும் பிற பிராந்​தி​யங்களி​லும் சுமார் 46 நாடு​க​ளில் அறு​ப​து​க​ளில் தாலி​டோ​மைடு மருந்து தொடங்​கப்​பட்​டது. இது காலை வியா​திக்​காக (Morning Si​ckness) பரிந்​து​ரைக்​கப்​ப​டு​கி​றது. ஆனால் பல ஆண்​டு​க​ளுக்​குப் பிறகு, இது டெர​டோ​ஜெ​னிக் என்று கண்​ட​றி​யப்​பட்​டது. அதா​வது பிறப்​புக் குறை​பாட்டை ஏற்​ப​டுத்​தும் நோயை உரு​வாக்​கும் டெர​டோ​ஜெ​னிக் என்று கண்​டு​பி​டிக்​கப்​பட்ட நேரத்​தில், ஆயி​ரக்​க​ணக்​கான குழந்​தை​கள் ஏற்​கெ​னவே ஃபோகோ​மே​லி​யா​வு​டன் பிறந்​த​னர் (கைகள் அல்​லது கால்​கள் தண்​டுக்கு அரு​கில் இணைக்​கப்​பட்​டி​ருக்​கும் பிற​விக் குறை​பாடு, கைகால்​கள் மிக​வும் வளர்ச்​சி​ய​டை​யா​தவை அல்​லது இல்​லா​தி​ருத்​தல்), இதன் விளை​வாக குறு​கிய கை, கால்​கள் அல்​லது அவை இல்​லா​தி​ருத்​தல். இந்த தோல்​வியை தாங்​கும் முத​லீட்டு வலிமை அந்த மருந்து கண்​டு​பி​டிப்​பா​ளர்​க​ளுக்கு இருக்க வேண்​டும்.

இந்த மருந்​தைக் கண்​டு​பி​டித்​த​வர்​க​ளின் (Intelle​ctu​al Patent Rights) கண்​டு​பி​டிப்பு சொத்து காப்​பு​ரிமை அடுத்த 20 ஆண்​டு​க​ளுக்கு இருக்​கும். இதை யார், எந்த நாடு உற்​பத்தி செய்​தா​லும் அவர்​க​ளுக்கு ராயல்டி தொகை 20 ஆண்​டு​கா​லம் கிடைக்​கும். 20 ஆண்​டு​க​ளுக்கு பிறகு இது காப்​பு​ரி​மை​யற்ற பொது மருந்​தாக மாறு​கி​றது. இந்​தி​யா​வில் இது​வரை புது​ம​ருந்து கண்​டு​பி​டிப்பு காப்​பு​ரிமை என்​பது கிட்டத்​தட்ட இல்லை அல்​லது விரல் விட்டு எண்​ணி​வி​ட​லாம் என்று தான் சொல்ல முடி​யும். ஆனால் மற்ற நாடு​கள் கண்​டு​பி​டித்த மருந்​து​களை இந்​தி​யா​வில் உற்​பத்தி செய்​யும் தொழில்​நுட்​பத்​தில் தான் இந்​தியா முன்​ன​ணி​யில் இருக்​கி​றது.

இந்​தி​யா​வின் மக்​கள்​தொ​கை​யில் 10% க்கும் குறை​வாக உள்ள ஜப்​பா​னால் அதிக எண்​ணிக்​கை​யி​லான மருந்​து​களைக் கண்​டு​பி​டிக்க முடிந்த​போது, 130 கோடிக்​கும் அதி​க​மான மக்​கள்​தொகை கொண்ட இந்​தியா உல​கம் முழு​வ​தும் ஒரு தொகுதி பஸ்​டர் மருந்​து​க​ளைக் கூட உரு​வாக்கி அறி​மு​கப்​ப​டுத்த முடி​ய​வில்லை.

ஜப்​பானால் முடி​யும் என்​றால் இந்​தி​யா​வால் முடி​யும் என்று அப்​துல் கலாம் நம்​பி​னார். அத​னால் தான் "இந்​தியா 2020'-இல் இதற்​கான திட்டத்​தைக் கொடுத்​தார். இதை செயல்​ப​டுத்​தும் அரசு தான் நமக்கு வாய்க்​க​வில்லை. ஆனால் இது உல​கெங்​கி​லும் உள்ள பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளால் மட்டுமே விளை​யா​டும் விளை​யாட்​டாக மாறி​யுள்​ளது.

​புது மருந்து கண்​டு​பி​டிப்​பு​கள் வெறும் தனி​ம​னித முத​லீட்​டில் மட்டும் செய்து விட முடி​யாது. இதற்கு அர​சின் ஒத்​து​ழைப்பு தேவை. அனைத்து நிலை​க​ளி​லும் முத​லீட்​டா​ளர்​க​ளுக்​குத் தேவை​யான ஆராய்ச்​சிக்​கேற்ற வளர்ச்​சிக்​கொள்கை, முத​லீடு, தோல்​வி​யைத் தாங்கி நிற்க அர​சின் உதவி போன்ற கொள்கை நிலைப்​பா​டு​கள்​தான் மிக​வும் முக்​கி​யம். புது மருந்து கண்​டு​பி​டிப்​பிற்கு, அதன் ஆராய்ச்​சிக்கு இந்​தி​யா​வில் இது​வரை எவ்​வித ஊக்​க​மும், ஆக்​க​மும் கொடுக்​கப்​ப​ட​வில்லை.

​ஓர் உயி​ரில்லா வைரஸ், ஒரு செல் பேக்​டி​ரியா, பல் செல் பூஞ்சை நோய் கிரு​மி​கள் தொடர்ந்து தங்​களை புதுப்​பித்​துக்​கொண்டு, நோய் தடுப்பு மருந்​து​களை எதிர்த்து எதிர்ப்​புச் சக்​தி​களை உரு​வாக்கி பல்கி பெருகி கொள்ளை நோயாக மாறி மக்​களை உல​கெங்​கும் பரவி கொன்​றொ​ழித்து வரு​கி​றது. அது ஒவ்​வொரு நொடி​யும் சிந்​திக்​கி​றது தனது எண்​ணிக்​கை​யைப் பெருக்க. ஆனால் இப்​படிப்பட்ட நோய் தொற்று உயிர் போரை எதிர்த்து வருங்​கா​லங்​க​ளில் போராட மனி​தர்​க​ளா​கிய நாம் நம்மை தயார் படுத்​திக்​கொண்​டி​ருக்​கி​றோமா என்​றால் இல்லை. உயி​ரில்லா வைர​ஸூக்கு இருக்​கும் வலிமை, அதை எதிர்த்து போரா​டும் உயி​ருள்ள மனி​தர்​க​ளால் நிர்​வ​கிக்​கப்​ப​டும் நாடு​க​ளுக்கு இருக்​கி​றதா? கிருமி சிந்​தித்​தால் அழிவு, மனி​தன் சிந்​தித்​தால் வாழ்வு.

சார்ஸ் வைரஸ் தன்னை புதுப்​பித்​துக்​கொண்டு (Mut​ated Str​ain) பிறழ்ந்த திரி​பாக மாறி S​A​R​S-​Co​V-2 வைர​ஸாக பிறந்து இன்​றைக்கு 15 ஏப்​ரல் 2020- இல் உல​கில் 20.26 லட்சம் பேரை பாதித்து, 1.29 லட்சம் பேரை கொன்று, 5 லட்சம் பேர் இதி​லி​ருந்து மீண்​டெ​ழுந்​தி​ருக்​கி​றார்​கள். இந்​தி​யா​வில் 11,555 பேரை பாதித்து, 405 பேரை இழந்து, 1,432 பேர் மீண்​டெ​ழுந்​தி​ருக்​கி​றார்​கள். சில நாடு​க​ளுக்கு இந்த வைர​ûஸக் கட்டுப்​ப​டுத்​தும் ஆளு​மை​யும், அறி​வி​யல், தொழில்​நுட்ப ஆராய்ச்சி பல​மும் இருப்​ப​தால் நோய் எதிர்ப்பு மற்​றும் மருந்​தை​யும், நோய் தொற்றை சோத​னை​மூ​லம் கண்​ட​றிந்து, தனி​மைப்​ப​டுத்தி, சிகிச்சை கொடுத்து மக்​களைக் காப்​ப​தி​லும், நோய்த் தொற்று பர​வ​ôமல் தடுப்​ப​தி​லும் முன்​ன​னி​யில் இருக்​கி​றோம் என்று தென் கொரி​யா​வும், ஜப்​பா​னும், சீனா​வும் இன்​றைக்கு நிரூ​பித்​தி​ருக்​கி​றார்​கள்.

​நோய் எதிர்ப்பு, நோய் தடுப்பு, நோய் அழிப்பு மருந்​து​களை, நோய் கண்​ட​றி​யும் சோதனை உப​க​ர​ணங்​கள், மருத்​துவ மேலாண்மை உப​க​ர​ணங்​கள் போன்​ற​வற்​றைக் கண்​டு​பி​டிக்க அரசு அதிக நிதியை ஒதுக்கி ஆராய்ச்​சிக்கு முக்​கி​யத்​து​வம் கொடுப்​பது என்​பது முதல் தேவை. மருத்​துவ ஆராய்ச்​சிக்கு மட்டு​மல்ல, இப்​ப​டிப்​பட்ட கொள்ளை நோய்​கள் வந்​தால் அவற்றை எப்​ப​டிச் சமா​ளிப்​பது என்ற உட​னடி ஆட்சி​முறை, தொழில்​நுட்​பம் சார்ந்த நிர்​வா​கம், பொரு​ளா​தார உத​வி​யோடு விரைந்து செய​லாற்​றும் தலை​மைக்கு உட​னடி தேவை இருக்​கி​றது என்​பதை இந்​தியா உண​ர​வேண்​டும்.

​ஒரு தனி​யார் ஆய்​வ​கத்​தில் கண்​டு​பி​டிக்​கப்​பட்ட ஒரு புதிய மருந்​தால், அந்த ஆய்​வ​கத்​தால் மட்டும், அதன் பாது​காப்பு மற்​றும் செயல்​தி​ற​னைக் கணிக்க முடி​யாது. இதை உரு​வாக்கி தோல்​வி​யில் இருந்து வெற்​றி​பெற வலு​வான நிதி​யுள்ள நிறு​வ​னங்​க​ளால் மட்டுமே முடி​யும். அமெ​ரிக்கா போன்ற நாடு​க​ளில் இப்​ப​டிப்​பட்ட முத​லீ​டு​கள் செய்து, தோல்​வி​யைத் தாண்டி நிற்​கும் சக்​தி​யுள்ள தனி​யார் நிறு​வ​னங்​கள் இருக்​கின்​றன. ஆனால் இந்​திய மருந்து ஆராய்ச்சி மற்​றும்
உற்​பத்தி நிறு​வ​னங்​கள் எது​வும் இத்​த​கைய அதிக ஆபத்​துள்ள நீண்ட கால மருந்து கண்​டு​பி​டிப்பு முயற்​சி​களை நிர்​வ​கிக்​கும் அள​வுக்கு நிதி ரீதி​யாக வலு​வாக இல்லை.

இந்த அலோ​பதி மருந்து ஆராய்ச்சி மற்​றும் கண்​டு​பி​டிப்​பிற்கே நிதி ஒதுக்​காத இந்​தியா எப்​படி சித்தா, ஆயுர்​வேத மருத்​துவ ஆராய்ச்​சி​க​ளுக்கு நிதி ஒதுக்​கும்? எனவே தான் இந்​தியா அரசு நோய்க்கான மருந்​து​க​ளைக் கண்​டுபி​டிக்க ஒருங்​கி​ணைந்த மருத்​துக் கொள்​கையை அறி​வித்து, பொது மருத்​துவ ஆராய்ச்சி நிறு​வ​னங்​களை நிறுவி அதற்கு அதிக முத​லீடு செய்து, உலகை அச்​சு​றுத்​தும் நோய்த் தொற்று கிரு​மி​களை ஒழிக்க உதவ வேண்​டும். அடிப்​படை வாழ்​வி​யல் அறி​வி​யல் ஆராய்ச்சி மேம்​பாட்​டிற்​கும், மூலக்​கூறு உட​லி​யல், பயோ டெக்​னா​லஜி துறை, மர​பணு பொறி​யி​யல், பயோ மெடிக்​கல் ஆராய்ச்​சிக்கு போது​மான நிதி ஒதுக்கி, அதோடு சேர்த்து நமது பாரம்​ப​ரிய சித்த, ஆயுர்​வே​தம், ஹோமி​யோ​பதி, யுனானி போன்ற மருத்​துவ ஆராய்ச்​சி​க​ளுக்​கும் நிதி ஒதுக்கி இவை அனைத்​தை​யும் சேர்ந்து ஒருங்​கி​ணைந்த கூட்டு மருத்​துவ ஆராய்ச்​சிக்கு முக்​கி​யத்​து​வம் கொடுக்க வேண்​டும். அப்போதுதான் மனித குலத்தை ஒழிக்​கும் நோய்த் தொற்று கிரு​மி​க​ளுக்கு எதி​ரான போரை நாம் தொடங்கமுடி​யும்.

உங்​கள் கன​வு​களை, இலட்​சி​யங்​களை பகிர்ந்து கொள்ள தொடர்பு  கொள்​ளுங்​கள்:

vponr​aj@live.​com

(தொட​ரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.