இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முழு நேர அல்லது பகுதி நேர படிப்பு முறையில் மட்டுமே டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பரிதி இரா. வெங்கடேசன்

ஆவின் நிறுவனத்தில் வேலை


மொத்த காலியிடங்கள்: 176
காலியிடங்கள் விவரம்:
பணி:
மேனேஜர் -24
டெபுடி மேனேஜர் -16
எக்ஸ்கியூட்டிவ் -22
பிரைவேட் செகரட்டரி -6
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் -15
டெக்னீசியன் -46
லைட் வெகிகிள் டிரைவர் -8
ஹெவி வெகிகிள் டிரைவர் -30
மில்க் ரிக்கார்டர் கிரேடு -9
மேனேஜர் பணிக்கு கால்நடை மருத்துவம், ஐஆர், நிதி, மார்க் கெட்டிங், பர்சேஸ், டைரியிங், சிவில் ஆகிய பிரிவுகளிலும், டெபுடி மேனேஜர் பணிக்கு ஐஆர், என்ஜினியரிங், சிஸ்டம், டைரியிங் பிரிவுகளிலும், எக்ஸிகியூட்டிவ் பணிக்கு மனிதவளம், அனிமல் ஹஸ்பெண்டரி, அக்கவுண்ட்ஸ், மார்க்கெட்டிங், பிளானிங், டைரியிங், ஃபுட் டேஸ்ட்டர்/ டிசைனர், சிவில் ஆகிய பிரிவுகளிலும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு மனித வளம் ஐஆர், அக்கவுண்ட்ஸ், டைப்பிங் பிரிவுகளிலும் பணிகள் உள்ளன.
வயது வரம்பு: 01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வித்தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. விவரங்களுக்கு www.aavinfedrecruitment.com என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்ப கட்டணம்: OC, BC, BC (Muslim), MBC மற்றும் DNC பிரிவினர் ரூ.250. SC, ST பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யுப்படும் முறை: கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, ஓட்டுநர் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: : www.aavinfedrecruitment.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Notification-24.11.2020.pdf/c4cafe8d-4de1-1bcc-38d8-280994058b3b என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.12.2020

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை

பணியிடம்: கன்னியாகுமரி மாவட்டம் ஊராட்சிகள்
பணி: ஊராட்சி செயலாளர்
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.15,900 + அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://kanniyakumari.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) / கிராம ஊராட்சித் தலைவரிடம் நேரடியாகக் கிடைக்கும்படியோ அல்லது பதிவஞ்சலிலோ 10.12.2020 பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2020/11/ 2020112427.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.12.2020


பாரத ஸ்டேட் வங்கியில் வேலை


பணி: அப்பரன்டீஸ்
காலியிடங்கள்: 8,500
தமிழ்நாடு காலியிங்கள்: 470
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை தவிர, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://nsdcindia.org/apprenticeship அல்லது https://apprenticeshipindia.org அல்லது http://bfsissc.com அல்லது https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/ போன்ற ஏதாவதோர் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்களுக்கு : https://www.sbi.co.in/documents/77530/400725/19112020_english+detailed+advt+apprentice.pdf/ef324fa1-143a-7167-dedb-612f654c36e3?t=1605791862261 என்ற இணையதள அறிவிப்பைப் பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.12.2020

தமிழக அரசில் வேலை


நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பணி: பணிபார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர்
காலியிடங்கள்: 678
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12.400
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முழு நேர அல்லது பகுதி நேர படிப்பு முறையில் மட்டுமே டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஒவ்வொரு மாவட்ட இணையதளத்திலும் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து பின்னர் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்டத்தின் ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாள்களில் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக கிடைக்கும்படியாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை https://tnrd.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.12.2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை


மொத்த காலியிடங்கள்: 493
பணி: டெக்னிக்கல் மற்றும் நான் - டெக்னிக்கல் டிரேட் அப்பரென்டீஸ்
காலியிடங்கள்: 493 (தமிழ்நாடு, புதுச்சேரிக்கு 199)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: http://iocl.onlinereg.in/ioclsrreg1120/Images/Advertisement_2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.12.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் இளம்சாதனையாளா் விருது வழங்கும் விழா

முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: திமுகவினருக்கு அமைச்சா் அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!

SCROLL FOR NEXT