முகப்பு
இளைஞர்மணி

வேலையில் சலிப்பு!

நமது வாழ்க்கை சலிப்பா இருக்கிறதா? சுவையானதாக இருக்கிறதா? என்பது நாம் வாழ்வை அணுகும் முறையைப் பொறுத்தது. சலிப்பு இல்லாமல் நமது வாழ்வை வைத்துக் கொள்ள நமக்குள் அபாரமாகச் சக்தியிருக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

நமது வாழ்க்கை சலிப்பா இருக்கிறதா? சுவையானதாக இருக்கிறதா? என்பது நாம் வாழ்வை அணுகும் முறையைப் பொறுத்தது. சலிப்பு இல்லாமல் நமது வாழ்வை வைத்துக் கொள்ளநமக்குள் அபாரமாகச் சக்தியிருக்கிறது.

ஆனாலும் இது முடியுமா? ஒரே மாதிரியான வேலையைத் தினமும் அதே மாதிரி செய்து அலுத்துப் போனவர்களுக்கு எங்கே சுவாரஸ்யம் வரும்? புதுமை வரும்? வராதுதான்; ஆனால்ஒருவர் நினைத்தால் வேலையைச் சுவாரஸ்யமானதாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு சில கருத்துகள்:

செய்யும் பணியில் பெருமை கொள்வது:

நீங்கள் ஒரு தட்டச்சர். தினமும் அதே தட்டச்சுக் கருவி அதே எழுத்துகள். காகிதத்தை சொருகுகிறீர்கள். யந்திரமாக அடிக்கிறீர்கள். மேலதிகாரி திட்டுவாரோ என்று பயந்து தப்பு வராமல் அடிக்கிறீர்கள். இந்த யந்திரத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க காலையிலிருந்தே கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறீர்கள். ஆக எட்டுமணி நேரம் தினசரி ஆர்வமின்றிக் கரைகிறது. இதே ஆர்வமின்மை அடுத்த 16 மணி நேரத்தையும் உற்சாகமிழக்க வைத்துவிடும்.

என்ன செய்வது இதற்கு? யாரும் திட்டப் போகிறார்களே என்ற எண்ணமில்லாமல் உங்களுடைய திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் தட்டச்சு செய்யுங்கள். உங்களுக்கு அந்தக் கடிதம் அழகானதாக காட்சியளிக்க வேண்டும். உங்கள் அழுகுணர்ச்சியில் பெருமை கொள்ளுங்கள். உங்களுக்குத் திருப்தியளிக்கும் எதுவும் மற்றவர்களுக்கு நிச்சயம் திருப்தியளிக்கும்.

பணிமுறையில் மாற்றம்:

உங்கள் பணியில் சலிப்புத் தரக்கூடிய அம்சங்களைத் தவிர்க்கப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் சக ஊழியர் ஒரு மாதத்துக்கு ஒரு முறை கோப்பு செய்ய வேண்டிய தாள்களை மலை போன்ற அளவு தருகிறார். இதை மாற்றி, வாராவாரம் சேரும் தாள்களை அவ்வப்போது தருமாறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

சூ.குழந்தைசாமி எழுதிய "அமைதிக்கு ஆயிரம் வழிகள்' என்ற நூலிலிருந்து.

முழு கட்டுரையைப் படிக்க →