தாய்மொழியை மட்டும் படிக்காமல் அந்நிய நாட்டு மொழிகளையும் கற்று புலமை பெற்றவர்களுக்கு கைநிறைய சம்பளம் பெறக் கூடிய மொழி பெயர்ப்பாளர் வேலை ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கிறது. குறிப்பாக ஃபிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பானிய மொழிகளைக் கற்றால் வேலைவாய்ப்பு குறித்து சற்றும் கவலை கொள்ளத் தேவையில்லை.
கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காலத்தில், தனிநபர்களின் நேரத்தைப் பயனுள்ளதாக இருக்கும் வகையிலும், மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கு கூடுதல் பலன் அளிப்பதை நோக்கமாகக் கொண்டும் ஃபிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பானிய மொழிகளை ஆன்லைனில் கற்கும் திட்டம்தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக, சர்வதேச அளவில் திறன் வாய்ந்த பல்வேறு மொழி சான்றிதழ் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது கேரள அரசின் கல்வித் துறை.மேலும் அந்த நிறுவனங்களின் மூலமாக, பல்வேறு நிலைகளிலான மொழி பயிற்சிளையும், பல்வேறு நிலைகளிலான மொழித் திறன் சான்றிதழ்களை வழங்குகிறது.
இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன் பெற ஆர்வமுள்ளவர்கள் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்குப் பதிவு செய்யலாம். இது கூடுதல் திறன் பெறுதல் கூட்டுத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆகஸ்ட் கடைசி வாரத்திலிருந்து தொடங்கும்.
கட்டணம் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கான பாட வேளைகள் பின்வருமாறு:
மொழி: ஜெர்மன்
பாட வேளைகள்: 90 மணி நேரம்
நிலை: எ1
கட்டணம்: ரூ.5,200
வகுப்பின் நேரம்: வார நாள்கள் மற்றும் வார இறுதி நாள்கள்
மொழி: ஃபிரெஞ்ச் பாட வேளைகள்: 100 மணி நேரம்
நிலை: எ1
கட்டணம்: ரூ.5,800
வகுப்பின் நேரம்: வார நாள்கள் மற்றும் வார இறுதி நாள்கள்
மொழி: ஜப்பானிஸ்
பாட வேளைகள்: 125 மணி நேரம்
நிலை: என்5
கட்டணம்: ரூ.6,900
வகுப்பின் நேரம்: வார நாள்கள் மற்றும் வார இறுதி நாள்கள்
விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டு கட்டணத்தைத் தவிர்த்து, பயிற்சிக்கான பொருள் செலவு மற்றும் மதிப்பீட்டு கட்டணத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, நிரந்தர முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்பட அவர்களின் அடிப்படை விவரங்களுடன் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். அவற்றில் விண்ணப்பதாரரின் விருப்ப மொழி, வகுப்பின் நேரத்தையும் தேர்வு செய்து குறிப்பிட வேண்டும்.
கேரள அரசின் கல்வித் துறை கூடுதல் திறன் பெறுதல் கூட்டு திட்டத்தின் (ஏஎஸ்ஏபி) கீழ் விரைவில் ஸ்பானிஷ் மற்றும் அரபு மொழிகளுக்கான படிப்பு
களையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
மேற்கண்ட படிப்புகள் தொடர்பான ஏதேனும் சந்தேகங்களுக்கு, 9495999738/ 9495999717 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.