இணைய வெளியினிலே...
பிறர் சொல்வதால்,நீ நாய் என்றாகிவிடப்போவதில்லை...அவர்கள் எதிர்பார்த்தபடி நீ குரைக்காமல்இருக்கும் வரை.
முக நூலிலிருந்து....
உடைந்து போகஆயிரம் காரணம்இருந்தாலும்...
உயிர்த்தெழஅன்பு ஒன்றே போதும்.
ஹேமா வந்தனா
அடைப்புக் குறிகளுக்குள்அடங்கிவிடுவதல்ல...
ஆயுள் கடந்தும்நிலைத்தலே வாழ்க்கை.அழகாய் வாழ்வோம்...
நமக்கான வாழ்வை.
ப்ரியன்
புற்றுக்குள்பாம்போ, கரையானோ...
இரண்டையும்தான்வணங்குகிறேன்...
எதுவும் இல்லை என்றாலும்.
செங்கான் கார்முகில்
அடிக்கடிசொல்லப்படும் பொய் ஒன்று...
உண்மையாகிறது.
பிரதாப் போத்தன்
சுட்டுரையிலிருந்து...
கண்ணாமூச்சி ஆட காத்திருக்கிறது ....
தென்னங்கீற்றின் பின்புறமாக
தேன் நிலவு.
மோவி
தேவை தீர்ந்து விட்டால்...
தேனே ஆனாலும் திகட்டத்தான் செய்யும்...
எல்லோருக்கும்!
அகரன்
பிறர் சொல்வதால்,நீ நாய் என்றாகிவிடப்போவதில்லை...
அவர்கள் எதிர்பார்த்தபடி நீ குரைக்காமல்இருக்கும் வரை.
பருத்தி மூட்டை
பணம் சேர்க்கத் தெரியாத வரைதன் கூட்டத்தில் சேர்த்து கொள்வதில்லை...
"மனிதர்கள்'.
சவேதி
வலைதளத்திலிருந்து...
இருட்டுக்கடை அல்வா...
திருநெல்வேலியின் அடையாளமாகிப்போனது.
இருட்டுக்கடை அல்வாவை சூடாக வாங்கி அப்படியே அதில ஒரு துண்டை எடுத்து வாய்க்குள்ள போட்டு அது நெய்யில வழுகிட்டு தொண்டைக்குழிக்குள்ள போற சுகமும் ருசியும் இருக்கே... அதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்.
இருட்டுக்கடை அல்வா சரித்திரம் தெரியுமா? ரொம்பவும் விசித்திரமா இருக்கு. சொக்கம்பட்டி ஜமீனில் மிக அதிகமாக குதிரைகள் இருந்தன. அவற்றைப் பராமரிக்க வட நாட்டிலிருந்து லாலா என்ற இனத்தவர்களை அழைத்து வந்தார்கள். லாலாக்களும் குதிரைகளுக்கு விதம் விதமாக உணவு சமைத்துப் போட்டார்கள்.
குதிரைகளுக்கு வைத்த உணவை குதிரைப்படை வீரர்களும் சாப்பிட்டு அதன் ருசியைப் போற்றினார்கள்.
எப்படியோ இச்செய்தி ஜமீனுக்கு எட்டியது. ஜமீன் குடும்பமும் லாலாக்களை தங்கள் சமையலறையில் பயன்படுத்திக் கொண்டனர். இப்படியாக சமையலில் கொடிகட்டிப் பறந்த லாலாக்கள் சொக்கம்பட்டி ஜமீன் ஆட்சி முடிவுக்கு வந்த பின் பல தலைமுறைகள் வாழ்ந்த நெல்லை மண்ணை விட்டு சொந்த ஊருக்குத் திரும்பவில்லை. அவர்கள் ஆரம்பித்த தொழில் தான் "அல்வா.'
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ணசிங் என்பவரின் மகன் பிஜிலி சிங் என்பவர் தான் அல்வாவைத் திருநெல்வேலிக்குக் கொண்டு வந்தார் என்று பதிவு செய்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு. (தென்னாட்டு ஜமீன்கள்)
எங்க தாமிரபரணி தண்ணி இப்படியாக குதிரைக்கு வச்ச கோதுமையை அல்வா ஆக்கி... இருட்டுக்கடை அல்வா ஆக்கி...
திரு நெல்வேலி சீமைக்கு அடையாளமாக்கி...
அடடா...
http://puthiyamaadhavi.blogspot.com/