வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 306
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
அப்போது பொருளாதார ஏற்றத்தாழ்வு சம்பந்தமாக கணேஷ் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு ஜூலி இது ஒரு typical two cents என்கிறது. அது என்ன என கணேஷ் புரொபஸரிடம் விசாரித்துக் கொண்டிருக்க விவாதம் எங்கெங்கோ போகிறது. மாமன்னர் வீரபரகேசரி ரொம்ப பதற்றமாக தோன்றுகிறார். தன் ஒற்றர் மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைச்சருடன் விவாதம் பண்ணுகிறார்.
ஒற்றர் மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைச்சர்: மன்னர் மன்னா, உங்கள் அமைச்சர்களே உங்களை கழுவி ஊற்றுவதை அந்த bugged கரப்பான்பூச்சிகள் வழியாக தெரிந்து கொண்டு நான் அதிர்ச்சிக்கு உள்ளானேன். ஆனால் அவர்களின் உள்நோக்கத்தை எப்படி அறிந்து கொள்வது? அதைத் தெரியாமல் எப்படி உங்களிடம் வந்து அறிக்கை தருவது என குழம்பினேன். பிறகு தான் இந்த புது ஐடியா எனக்குள் உதித்தது.
வீரபரகேசரி: அதான் என்ன?
ஒற்றர் மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைச்சர்: கருவண்டுகள். இந்த வண்டுகளுக்குள் சக்திவாய்ந்த சிப்புகளை பொருத்தி இருந்தோம். கருவண்டுகள் பறப்பதைக் கண்டதும் கரப்பான் பூச்சிகள் போய் ஒளிந்து கொண்டன. அப்போது இந்த அமைச்சர்கள்
எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என வேவு பார்த்தோம்.
அவர்கள் என்ன பண்ணினார்கள் தெரியுமா?
வீரபரகேசரி: சொல்லித் தொலைய்யா..
ஒற்றர் மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைச்சர்: மன்னர் மன்னா, ஆச்சரியம். அவர்கள் உங்களைத் திட்டுவதை நிறுத்தி விட்டார்கள்.
வீரபரகேசரி: ஆங்? ஏன்? It defies logic right?
ஒற்றர் மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைச்சர்: ஆம் மன்னா, I was flabbergasted.
கணேஷ் ஜூலியிடம்: அதென்ன பிளாஸ்கில கேஸூங்கிறார்?
ஜூலி: பிளாஸ்கில கேஸில்ல, flabbergasted. Surprised greatly எனப் பொருள். இன்னொரு மாற்றுச்சொல் astonished. அதாவது மிகவும் வியப்புக்
குள்ளாவது.
கணேஷ்: வடிவேலுவோட "நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.'
ஜூலி: ஹி ஹி. அனேகமா.
கணேஷ்: ஆனா அதென்ன பிளாபர்கேஸ்டட்னு வித்தியாசமான பெயர்?
ஜுலி: எனக்குத் தெரியல. புரொபஸர் தான் உதவணும்.
புரொபஸர் (செருமுகிறார்): ஓகே. இது ஒரு slang word. கொச்சையான சொல். இது ஆங்கிலத்தில் 18-ஆம் நூற்றாண்டில் மத்திய
பகுதியில் ஒரு பத்திரிகையில் முதன்முதலாகப் பயன்படுத்தப்படு
கிறது. என்ன சுவாரஸ்யம் என்றால் இது ஆங்கிலத்தில் உள்ள வட்டார வழக்கில் இருந்து வருவதாக சொல்லப்படும் வார்த்தை. குறிப்பாக flap + aghast எனும் வார்த்தைகள் இணைந்து flabbergast வருகிறது.
கணேஷ்: Flap என்றால் படபடவென அடித்துக் கொள்வது தானே? bird flapped its wings.
புரொபஸர்: கரெக்ட். அதே நேரம் பதற்றமாக இருப்பது, பரபரப்பாக இருப்பது என்றும் இதற்கு பொருள் உண்டு. உதாரணமாக, ஒருவர் பதற்றத்தில் எதையாவது பேசிக் கொண்டும், செய்து கொண்டும் இருந்தால், Please calm down, dont flap என்று சொல்லலாம்.
கணேஷ்: விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கீப்பிங்கின் போதும், பேட்டிங்கின் போது அப்படி பரபரப்பாக துடித்துக் கொண்டே
இருப்பார்.
புரொபஸர்: ஆமாம். அடுத்து aghast. Aghast என்றால் to be filled with horror and surprise. அதாவது மோசமான வகையில்
ஆச்சரியப்படுவது, அதிர்ச்சிக்குள்ளாவது. இந்த இரண்டும் சேரும் போது என்ன வருகிறது?
கணேஷ்: ஒருவர் கடும் அதிர்ச்சியில் படபடப்பது.
புரொபஸர்: ஆமா, அப்படித்தான் flabbergas உருவாகிறது. To be worn out with exertion.
ஜூலி: சூப்பர். அடுத்து கணேஷ் நீ கேட்ட defying logic க்கு வருகிறேன். ஒன்று தர்க்கத்துக்கு புறம்பாக உள்ளது எனச் சொல்லவே அது defies logic என்கிறோம். அதாவது என்னால் நம்ப முடியவில்லை எனும் பொருளில் இதைச் சொல்கிறோம்.
வீரபரகேசரி: இவனுங்க எங்கெங்கயோ போயிட்டானுங்க. நாம மேட்டருக்கு வருவோம். அமைச்சர்கள் ஏன் கருவண்டுகளைக்
கண்டதும் அமைதியானார்கள்? பயமா?
ஒற்றர் மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைச்சர்: இல்லை மன்னா, அவர்கள் கருவண்டுகளில் bug இருப்பதை கவனிக்கவில்லை. கரப்பான்பூச்சிகளில் மட்டும் இருப்பதாக நினைத்தார்கள்.
வீரபரகேசரி: ஓ அப்போ வேண்டுமென்றே கரப்பான்பூச்சிகள் முன்னிலையில் என்னைப் பற்றி அசிங்க அசிங்கமா பேசினாங்களா? கிராகதர்களா! துரோகிகளா!
ஜூலி: நீங்க ரொம்ப டியூப்லைட் மன்னா!
(அப்போது பேரழகி லலிதாங்கி கடுஞ்சினம் கொண்டு அங்கு வருகிறாள்)
(இனியும் பேசுவோம்)