இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 309

ஆர்.அபி​லாஷ்

ஊரடங்கு பிரகடனம் செய் யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னர் தன் அமைச்சர்களை bug வைத்த பூச்சிகளைக் கொண்டு வேவு பார்க்கும் போது, அந்தரப்புரத்தில் இருந்து லலிதாங்கி கோபமாக வருகிறாள். லலிதாங்கியை சமாதானப்படுத்தும் நோக்கில் மன்னர் அவளிடம் அளவளாவிக் கொண்டிருக்கையில் சட்ட அமைச்சர் அங்கு அழுதபடி வருகிறார்.

சட்ட அமைச்சர் அழுதுகொண்டே: மன்னர் மன்னா, I have been back-stabbed, I am framed.. என்னைக் காப்பாத்துங்க ப்ளீஸ். 
கணேஷ்: Back என்றால் முதுகு. Stab என்றால்? 
ஜூலி: கத்தியால் குத்துவது. 
கணேஷ்: முதுகில் குத்துவதா? 
ஜூலி: ஆமா 
கணேஷ்: யூ மீன் துரோகம் 
பண்ணுவது. 
ஜூலி: ம்...ம்ம்...ம்... துரோகம் என்பதும் சரியான அர்த்தமல்ல. To backstab is to attempt to discredit (a person) by underhanded means, as innuendo, accusation, or the like Discredit என்றால் ஒருவருடைய பெயரைக் கெடுப்பது. அதுவும் நியாயமாக அல்ல, நயவஞ்சகமாக ஒருவருக்கு அவப்பெயர் உண்டு பண்ணுவது. புரியுதா? 
கணேஷ்: ஓ... புரியுது.You too Brutus? சீஸரை புரூட்டஸ் முதுகில் குத்தின கதையில் இருந்து வந்தா இச்சொல்? 
ஜூலி: அப்படிச் சொல்ல முடியாது. 
சீஸரின் கதை ரொம்ப பழையது. ஷேக்ஸ்பியரின் நாடகமான ஜுலியஸ் சீஸரே 16 - ஆம் நூற்றாண்டு படைப்பு. ஆனால் 1920-25 காலகட்டத்தில் தான் இந்த backstabbing எனும் சொல் பரவலாக புழக்கத்துக்கு வருகிறது.  
கணேஷ்: அதென்ன innuendo? கேட்க கொழுக்கட்டை போல இருக்கிறது. 
ஜுலி: அவதூறு, குத்தல் பேச்சை எல்லாம்  innuendo என்று சொல்லலாம். 
கணேஷ்: மொத்தமா பார்க்கும் போது நமது சட்ட அமைச்சரை யாரோ 
நயவஞ்சகமாக அவதூறு செய்து பெயரைக் கெடுத்துவிட்டார்கள். சுருக்கமா சொல்றதுன்னா அசிங்கப்படுத்தீட்டாங்க. 
ஜூலி: சும்மா இல்ல, எதிர்பாராத முறையில் நயவஞ்சகமா பெயரைக் 
கெடுப்பது, அதனால் ஒருவருக்கு பெரிய மானக்கேடாகுவது. 
கணேஷ்: ரைட்டு ரைட்டு. Frame பண்றதுன்னா பிரேம் போட்டு சுவத்தில் மாட்டி வைக்கிறதா?
ஜூலி: ஏன் இப்படி அபசகுனமா யோசிக்கிறே? சேச்சே. 
கணேஷ்: பின்னே? 
ஜூலி: Frame என்பது ஒரு கொச்சையான பயன்பாடு. அதாவது ஒருவரை தவறாக மாட்டி விடுவதற்காக சதியாலோசனை பண்ணுவது. அதாவது to conspire to incriminate (someone) on a false charge. 
(சட்ட அமைச்சர் தொடர்ந்து கண்ணைக் கசக்கி அழுகிறார். அவரது கண்ணீரும் எச்சிலும் பட்டு மன்னரின் சால்வை கறையாகிறது.)
வீரபரகேசரி: எதுன்னாலும் அமைதியா எச்சி விடாம அழணும். புரியுதா? சரி, உன்னை யாரு என்ன பண்ணினா? 
(சட்ட அமைச்சர்  தன்னுடைய செல்போனை எடுத்து ஒரு காணொளியை வீரபரகேசரிக்குக் காட்டுகிறார்) 
வீரபரகேசரி: என்ன அசிங்கம்டா இது? 
Oh it is a shame, a crying shame!

சட்ட அமைச்சர்: அது ஒரு பெரிய கதை மன்னா. நான் எந்த தப்பும் பண்ணலை. நான் ஒரு   நண்பர் கிட்ட   பேசினதை வேறேதோ சம்பந்தமே இல்லாத ரவுடி  படத்தோட ஜாயின் பண்ணி அவதூறு கிளப்பிட்டானுங்க சண்டாளனுங்க அதில் உங்க அமைச்சரவையின் முக்கிய தலைகளே பின்னிருந்து இயக்குகிறார்கள். Morphing மன்னா morphing! அன்றி இதில் ஒரு துளி கூட உண்மையில்லை.
வீரபரகேசரி: சேச்சே... ரொம்ப அசிங்கம்,  a bloody shame, a dog-gone shame! 

சட்ட அமைச்சர்: நீங்க வேணுமுன்னா யாரிடமாவது கேட்டுப் பாருங்க. ஒரு வாட்டியாவது தப்பா பேசியிருக்கேனான்னு? 
வீரபரகேசரி:  இனிமே நீ யாருக்கும் போன் பண்ணக் கூடாது. லேண்ட் லைன் போன் மட்டும் தான் உனக்கு அனுமதி. இல்லை, அதுவும் கிடையாது. டெலிகிராம் வேணும்னா அனுப்பிக்கோ. அதுக்கு மேலே யாரிடமும் நீ பேசக் கூடாது. இது தான் என் உத்தரவு.
சட்ட அமைச்சர்:  சரிமன்னா. சிரமேற் கொள்ளுகிறேன்.

 (இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT