இளைஞர்மணி

மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி!

வானியல் ஆய்வில் ரேடியோ தொலைநோக்கி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

எஸ். ராஜாராம்

வானியல் ஆய்வில் ரேடியோ தொலைநோக்கி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விண்மீன்கள், கோள்கள் ஆகியவை எதிரொளிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு ரேடியோ தொலைநோக்கிகள் செயல்படுகின்றன.

அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி உருவாக்கப்படவுள்ளது. ஸ்கொயர் கிலோமீட்டர் ஆரே அப்சர்வேட்டரி (எஸ்கேஏஓ) என்ற அமைப்பின் கவுன்சில் கடந்த வாரம் இதற்கான அனுமதியை அளித்துள்ளது. ஆஸ்திரேலியா, தெற்கு ஆப்பிரிக்காவில் அமைக்கப்படவுள்ள இந்த ரேடியோ தொலைநோக்கி 50 ஆண்டுகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, சீனா, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து 2 பில்லியன் யூரோ மதிப்பில் இந்தத் தொலைநோக்கியை அமைக்கவுள்ளன. நிகழ் ஜூலை மாதம் இதற்கான பணி தொடங்கி 2029-ஆம் ஆண்டு நிறைவடையும்.

"ஸ்கொயர் கிலோமீட்டர் ஆரே' என்பதுதான் அந்த ரேடியோ தொலைநோக்கியின் பெயர். அந்தப் பெயருக்கேற்ப ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தென் ஆப்பிரிக்காவில் 197 டிஷ்களும், ஆஸ்திரேலியாவில் 1,31,072 ஆன்டெனாக்களும் அமைக்கப்படும். இதன் கட்டுமானப் பணி முழுமையாக முடிவடைந்து செயல்பாட்டுக்கு வந்ததும் ஆண்டுக்கு 710 பெராபைட் அறிவியல் தரவை இந்தத் தொலைநோக்கி உருவாக்கும்.

""பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் திறக்க உலகின் மிகப்பெரிய இரு ரேடியோ தொலைநோக்கி நெட்வொர்க்குகளை உருவாக்குவதன் மூலம் மனிதகுலம் பெரும் பாய்ச்சலை முன்னெடுத்து வருகிறது'' என்கிறார் எஸ்கேஏஓ இயக்குநர் பிலிப் டயமண்ட்.

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பின் இயக்குநர்கள், ""அறிவியலின் அறியப்படாத எல்லைகளை ஆராய்ந்து, விண்மீன் திரள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாமம், தீவிரச் சூழல்களின் அடிப்படை இயற்பியல் மற்றும் முக்கிய செயல்முறைகளின் புரிதல் ஆகியவற்றை இந்த ரேடியோ தொலைநோக்கி ஆழப்படுத்தும்'' என நம்புகின்றனர்.

இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் 100 நிறுவனங்களைச் சேர்ந்த 500 பொறியாளர்கள் இந்தத் தொலைநோக்கியை வடிவமைக்கும் பணியில் ஈடு
பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பிரமுகர் சாலை விபத்தில் பலி

குளிர்கால கூட்டத்தொடர்! மரபுகளைக் காக்கும் வகையில் செயல்பட ஓம் பிர்லா அறிவுரை!

ரூ.12 ஆயிரத்தை தாண்டிய ஒரு கிராம் தங்கம் விலை

சென்னைக்கு 50 கி.மீ. தொலைவில் டிட்வா! காற்றின் வேகம் அதிகரிப்பு!!

இலங்கையிலிருந்து 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்ட விமானப் படை!

SCROLL FOR NEXT