வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 316
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னரைப் பார்க்க மனிதவளத்துறை அமைச்சர் தன் சகாக்களுடன் வந்திருக்கிறார். அவரும் அவருடைய மகனுமாக நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு. அது குறித்து நாடெங்கும் விவாதங்கள் நடக்க, கண்டனங்கள் கிளம்ப, தன்னைப் பாதுகாக்குமாறு அவர் வீரபரகேசரியிடம் வந்திருக்கிறார். அப்போது அவருடைய மகன் ploughed into the protesters with his car என வீரபரகேசரி கோபத்தில் அவரிடம் கத்துகிறார். அதைக் கேட்கும் கணேஷ் plough எனும் கலப்பைக்கும் விபத்துக்கும் என்ன சம்பந்தம் என ஜூலியிடம் கேட்கிறான். ஜூலியின் பதிலைக் கேட்போமா?
ஜூலி: To plough into someone or something என்றால் வேகமாய் பலமாய் ஒருவர் அல்லது ஒன்றின் மீது மோதுவது. அதுவும் கவனமில்லாமல், கட்டுப்பாடில்லாமல் ஒரு வண்டியை ஓட்டி வந்து மோதும் போது, That is to crash into someone or something with force, especially because you are moving or driving too quickly or in a careless or uncontrolled way. புரியுதா?
கணேஷ்: அதாவது ஆக்ஸிடெண்ட் பண்ணுவது.
ஜூலி: எவ்வளவு விளக்கமாச் சொன்னேன், நீ என்னடான்னா ரெண்டே வார்த்தைகளில் முடிச்சிட்டே.
கணேஷ்: சரி, ஏன் கலப்பை வருது?
ஜூலி: கலப்பதால். மண்ணை உழும் போது என்ன
வாகும்?
கணேஷ்: மண்னுக்குள் இருப்பவை கிளறப்பட்டு வெளியே வரும். மண் முழுக்க உழப்பட்டு பதத்துக்கு வரும்.
ஜூலி: அப்படி ஒருவரை இடித்து நாசமாக்குவதே ல்ப்ர்ன்ஞ்ட்ண்ய்ஞ் ண்ய்ற்ர் ள்ர்ம்ங்ர்ய்ங். புரியுதா?
கணேஷ்: சிறப்பாக புரியுது. இனிமேல் மறக்கவே மறக்காது.
ஜூலி: அது ஒரு பக்கம் கெடக்கட்டும். நம்ம மன்னர் என்ன சொல்கிறார்னு கேட்போம்.
வீரபரகேசரி: அன்றைக்கு என்ன நடந்தது? தெளிவாகச் சொல்லு.
மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: My lord, அன்னிக்கு நான் ரொம்ப சீக்கிரமாகவே பிரசாரத்துக்காக போயிட்டேன்.
வீரபரகேசரி: சீக்கிரமுன்னா?
மனிதவளத்துறை அமைச்சரின் மகன் : at morning மன்னா.
வீரபரகேசரி: டேய்... முட்டைக்கோஸ்.
மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: மன்னா?
வீரபரகேசரி: காலையில் என்பதற்கு ஆங்கிலத்தில் at morning சொல்லக் கூடாதுடா முட்டைக்கோஸ். In the morning என்றே சொல்லணும்.
மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: சரி மன்னா.
வீரபரகேசரி: மதியத்தில் என்பதை எப்படிச் சொல்வாய்?
மனிதவளத்துறை அமைச்சரின் மகன் : In the afternoon மன்னா.
வீரபரகேசரி: கரெக்ட். மாலையில் என்பதை எப்படிச்
சொல்வாய்?
மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: In the evening மன்னா.
வீரபரகேசரி: இரவில் என்பதை எப்படிச் சொல்வாய்?
மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: In the night மன்னா?
வீரபரகேசரி: இல்லையடா முட்டைக்கோஸ். At night என்று சொல்ல வேண்டும்.
மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: ஓ... இப்போ
தெளிவாக விளங்கிருச்சு மன்னா.
வீரபரகேசரி: மிச்ச கதையைச் சொல்லு. காலையில் என்ன பண்ணினாய்?
மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: We began our campaigning மன்னா.
மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: அன்று நீ அந்த கொடுங்குற்றத்தை ஏன் செய்தாய் எனச் சொல்.
மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: மன்னர் மன்னா, we arrived at Delhi in 10 am.
வீரபரகேசரி: டேய் முட்டைக்கோஸ், arrived at என்று சொல்லக் கூடாது. Arrived in என்று சொல்லணும்.
மனிதவளத்துறை அமைச்சரின் மகன்: ஆனால் மன்னா, ஹழ்ழ்ண்ஸ்ங்க் ஹற் பயன்படுத்தப்படுவதை நான் பார்த்திருக்கிறேனே?
வீரபரகேசரி: Arrived inக்கும், arrived atக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.
கணேஷ்: அப்படியா? ஜூலி, எனக்கு இதுநாள் வரைக்கும் தெரியாமப் போச்சே.
(இனியும் பேசுவோம்)