இளைஞர்மணி

ஐஐடி- கோரக்பூர் புதிய 4 ஆண்டு படிப்பு!

என்.ஜே.


கோரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ஒரு புதிய நான்காண்டு இளம்நிலைப் பட்டப்படிப்பை அறிமுகம் செய்திருக்கிறது.  இந்த கல்விநிலையத்தில் ஏற்கெனவே ஐந்தாண்டு பட்டப் படிப்பான  எம்.எஸ்ஸி படிப்பு இருந்து வருகிறது.  

அந்தப் படிப்புக்குப் பதிலாக இந்த புதிய நான்காண்டு இளநிலைப் பட்டப்படிப்பை  ஐஐடி -கோரக்பூர் வழங்குகிறது. 

இந்த  பேச்சிலர் ஆஃப் சயின்ஸ் (பிஎஸ்) நான்காண்டு பட்டப் படிப்பைப் படிப்பவர்கள்,  மாஸ்டர் ஆப் சயின்ஸ் (எம்எஸ்) படிப்பைத் தொடர விரும்பினால், தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நான்காண்டு படிப்பின் இறுதி செமஸ்டரான  ஆறாவது செமஸ்டரின்போது,  மாணவர்கள் ஐந்தாண்டு படிப்புக்காக விண்ணப்பிக்கலாம். 

அவர்களுடைய பத்தாவது செமஸ்டரின்போது,  ஐந்தாண்டு எம்எஸ் படிப்பை முடித்துவிடலாம். 

இந்த நான்காண்டு இளநிலைப் பட்டப்படிப்பில் 

 அப்ளைடு ஜியாலஜி,  
 கெமிஸ்ட்ரி, 
 எகானாமிக்ஸ்,  
எக்ஸ்ப்ளோரேஷன் ஜியோ பிசிக்ஸ்,  
 கணிதம்  மற்றும் கம்ப்யூட்டிங்,  
 பிசிக்ஸ் ஆகிய  பிரிவுகள் உள்ளன. 

இந்தப் பாடப் பிரிவுகளுக்கான விரிவான பாடத்திட்டங்கள், ஐஐடி கோரக்பூரின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT