இணைய வெளியினிலே...
பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பல வேளைகளிலும் எமக்கு ஒரு சிறையாகி விடுகிறது. எம்மைப் பற்றி நாமே கருதிக் கொள்ளும் தோற்றங்களும் பல வேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்துவிடுகிறது,
இளைஞர்மணிஇணைய வெளியினிலே...
பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பல வேளைகளிலும் எமக்கு ஒரு சிறையாகி விடுகிறது. எம்மைப் பற்றி நாமே கருதிக் கொள்ளும் தோற்றங்களும் பல வேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்துவிடுகிறது,
முக நூலிலிருந்து....
கால்களைச் சுமந்த செருப்புக்கு
எப்படி நன்றி சொல்வது?
மீண்டும் அணிந்து
கொள்வதைத் தவிர.
இளமதி
நாயகன்,
எதிர்நாயகன்
இருவேடத்திலும்
நீ தான் வாழ்க்கையே...
எப்படித்தான்
புரிந்துகொள்வது
இந்த கேரக்டரை?
உமா மோகன்
உங்களால் எதையாவது
எளிமையாக விளக்க
முடியாவிட்டால்,
உங்களுக்கு அது புரியாது.
- பேராசிரியர் ஃபெய்ன்மேன்
சுந்தரபுத்தன்
இருளாய் இருக்கிறதென்று
விளக்கேற்றினோம்.
இப்போது,
வெளிச்சத்தையும் நிழலையும்
சேர்த்துச் சுமக்கிறது...
நிலம்.
டிகே கலாப்ரியா
சுட்டுரையிலிருந்து...
இணையத்தில் நாட்டைத்
திருத்த வருபவர்கள்...
சுகர் டேப்ளட்டையும்,
பிரசர் மாத்திரையையும்
கையோடு எடுத்து வருவது நல்லது.
ராயல் என்ஃபீல்டு புத்தா
பர்சின் கனம் குறையும்போது,
மனசின் கனம்
அதிகரிக்கிறது.
ச ப் பா ணி
சனி முடிந்தால்...
ஞாயிறு
பிறந்து தானே ஆக வேண்டும்?
சன்யாசி
விழிகளையும், மனதையும்
திறந்து வையுங்கள்.
பிடித்த ஜன்னல்கள்,
எப்போது வேண்டுமானாலும்
திறக்கலாம்.
செல்வ பாரதி
வலைதளத்திலிருந்து...
பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பல வேளைகளிலும் எமக்கு ஒரு சிறையாகி விடுகிறது. எம்மைப் பற்றி நாமே கருதிக் கொள்ளும் தோற்றங்களும் பல வேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்துவிடுகிறது,
பிறரின் அபிப்பிராயங்கள் எமது தீர்மானங்களின் மீது பாதிப்பை உண்டு பண்ணுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதன் காரணமாகவே பல சமயங்களில் நாம் நாமாக இல்லாமல் இருக்கிறோம்.
பிறரின் அபிப்பிராயங்கள் நமது மூளையைப் பல சமயங்களிலும் கழுவி விடுகிறது. நம்மை அறியாமலேயே நாம் எமது சுயபுத்தியை அல்லது சுய விருப்பத்தை மீறி நடந்து கொள்கிறோம்.
ஏனெனில், பிறர் எம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் நமக்கு அவ்வளவு அக்கறை. பிறரின் அபிப்பிராயங்களுக்கு நாம் ஏன் பயப்படுகிறோம் ?
நாம் சுயமாக, சுதந்திரமாகச் சிந்திக்கும்போதெல்லாம் சமூகத்தை நாம் வழிநடத்துகிறோம்.
பிறரின் அல்லது சமூகத்தின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப சிந்திக்கும்போதெல்லாம் நம்மைச் சமுகம் வழி நடத்துகிறது.
http://radhamanohar.blogspot.com/