இளைஞர்மணி

போதை மருந்து பழக்கத்தைத்  தடுக்க பயிற்சி அளிக்கும் நிறுவனம்!

தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம்  (என்ஐஎஸ்டி) என்பது இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கான மத்திய ஆலோசனைக் குழுவாகும்.

நிலா

தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (என்ஐஎஸ்டி) என்பது இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கான மத்திய ஆலோசனைக் குழுவாகும்.

இது சமூகப் பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான சிறந்த மையமாகும்.

தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

சமூகப் பாதுகாப்பிற்கான திட்டங்களையும் நடைமுறைகளையும் வரையறுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சிகள், ஆலோசனைகளை வழங்குகிறது. அது தொடர்பான ஆவணங்களை, வெளியீடுகளை மக்களுக்கு அளிக்கிறது.

போதை மருந்து பயன்பாட்டை தடுக்க பயிற்சி அளித்தல், அதற்கான திறனை உருவாக்குதல்: மருத்துவ சிகிச்சை மையங்களில் பணிபுரியும் ஆலோசகர்கள், சமூகப் பணியாளர்கள், வேலை செய்பவர்களுக்கு போதை மருந்துகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு உதவும் ஒரு மாதச் சான்றிதழ் படிப்பை இந்த தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் வழங்குகிறது.

இந்தச் சான்றிதழ் படிப்பில் போதை மருந்துகளைப் பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான அறிவு பெறுவதற்கான படிப்பும், போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களில் பணி புரிவதற்கான நடைமுறை அறிவை வளர்ப்பதற்கான ஒரு வாரம் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அதில் போதை மருந்துப் பழக்கத்தின் அடிப்படைகள், அதிலிருந்து ஒளவிடுபடுவதற்கான தூண்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போதை மருந்து பழக்கத்திலிருந்து மீள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கான படிப்பும், செயல்முறைப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பான 15 நாள்கள் படிப்பு, ஐந்து நாள் படிப்பு தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அதன் பிரிவுகளான ரீஜினல் ரிசோர்ஸ் ட்ரெய்னிங் சென்டர்களிலும் வழங்கப்படுகின்றன.

இதுதவிர, இந்நிறுவனம் பல்வேறு படிப்புகளை அளிக்கிறது. கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறது. சமூகநலத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இது தொடர்பான அதிக விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.nisd.gov.in/about.html என்ற இணையதளத்தைச் சென்று பாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு

வேலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிப்பு

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

திருமண நகைகள் திருட்டு - சிஆா்பிஎஃப் பெண் காவலா் விடியோவால் சா்ச்சை

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

SCROLL FOR NEXT