மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் படிப்புகள்!
எலக்ட்ரானிக்ஸ் படிப்பு இருப்பது எல்லாருக்கும் தெரியும். அதன் துணைப் பிரிவான படிப்புதான் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்.
எலக்ட்ரானிக்ஸ் படிப்பு இருப்பது எல்லாருக்கும் தெரியும். அதன் துணைப் பிரிவான படிப்புதான் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ். மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் குறிப்பிடத்தக்க படிப்பாகும். விண்வெளி முதல் உங்கள் கைகளில் உள்ள செல்லிட பேசி வரை மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறையோடு தொடர்புடையவைதான். மிகச் சிறிய அளவிலான எலக்ட்ரானிக்ஸ் வடிவமைப்புகள், எலக்ட்ரானிக் பாகங்கள், செமி கண்டக்டர் மெட்டீரியல்ஸ்களை உருவாக்க இந்த மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறை உதவுகிறது, கணினியின் புராசசர் டிசைன், சிப் டிசைன், ஐசி ஃபேப்ரிகேஷன் ஆகியவற்றை இந்தப் படிப்பு மாணவர்களுக்குக்கற்றுத் தருகிறது.
மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் எம்.டெக் படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. இதற்கு மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான படிப்பில் பி.இ, பி.டெக், எம்.எஸ்சி அல்லது இவற்றுக்கிணையான படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். எஅபஉ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பி.டெக் உடன் இணைந்த எம்.டெக் மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் படிப்புகள், எம்.டெக் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் & விஎல்எஸ்ஐ டிசைன், எம்.டெக் இன் மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகள் உள்ளன.
Advertisement
இந்தப் படிப்பை படித்தவர்கள் கணினி மதர்போர்டை உருவாக்கும் வேலையைச் செய்யலாம். புராசசர்ஸ் யூனிட் டெவலப்பர், எல்இடி/ டிஎஃப்டி டெவலப்பர்ஸ், அனாலாக் டிசைனர், புரடக்ஷன் என்ஜினியர் மற்றும் கல்லூரி ஆசிரியர் பணிகளைச் செய்யலாம். மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றலாம்.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், இன்டெல், மைக்ரான் டெக்னாலஜி, டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், டோஷிபா, மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை செய்யலாம்.
இந்தியாவில் ஐஐடி பாம்பே, ஐஐடி டெல்லி உள்ளிட்ட பல ஐஐடிகளிலும், பிட்ஸ்பிலானி, டெல்லி டெக்னாலஜி யுனிவர்சிட்டி உள்ளிட்ட கல்விநிலையங்களிலும் இந்தப் படிப்பு
கற்றுத் தரப்படுகிறது.