பியூட்டி டிப்ஸ்...
பியூட்டி டிப்ஸ்...
பெண்கள் இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்பு பாலாடை சிறிது எடுத்து முகத்தில் தடவிக் கொண்டு படுத்துவிட்டால் முகம் பட்டுப்போல் மிருதுவாக இருக்கும்.
எலுமிச்சை சாற்றை பஞ்சில் நனைத்து தினமும் குளிப்பதற்கு முன்னால் முகத்தில் மிருதுவாகத் தேய்த்துக் கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்து வர பருக்கள் போய்விடும். கறுமை இருந்தாலும் போய்விடும்.
வாரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடு செய்து உடம்பில் தேய்த்துக் கொண்டு குளித்து வர சருமம் மிருதுவாக இருக்கும்.
Advertisement
சந்தனத்தை அரைத்து சிறிது தண்ணீர்விட்டு கலந்து உடலில் தடவிக் கொண்டால் உடல் உஷ்ணம் குறைவதுடன் மேனி நீண்ட காலம் இளமையாக இருக்கும்.
சில துளிகள் பாதாம் எண்ணெய், முட்டையின் வெள்ளைக் கரு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து குளித்து வர முகம் மென்மையாக இருக்கும்.