முகப்பு
மகளிர்மணி

வீட்டு வைத்தியம்!

பொன்னாங்கண்ணி இலைகளை வெறும் வாயில் மென்று சாற்றை சிறிது நேரம் வாயில் வைத்திருந்துவிட்டு விழுங்கி விடவும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:41 AM
பகிர்:

  பொன்னாங்கண்ணி இலைகளை வெறும் வாயில் மென்று சாற்றை சிறிது நேரம் வாயில் வைத்திருந்துவிட்டு விழுங்கி விடவும். இதுபோன்று 2-3 நாள்கள் தொடர்ந்து செய்து வந்தால்  விரைவில் வாய்ப்புண் குணமாகும்.

  சுக்கு ஒரு துண்டை தட்டி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 2 தேக்கரண்டி, சிறிது கல் உப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து அத்துடன் தட்டி வைத்துள்ள சுக்கை சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டு, தினமும்  ஒரு பிடி சூடான சாதத்தில் போட்டு சிறிது நெய்விட்டு பிசைந்து சாப்பிட வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை, பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

  நாவல் பழம் சாப்பிட்ட பின் அதன் கொட்டையைத் தூக்கி எறியாமல் நன்கு சுத்தம் செய்து வெயிலில் காய வைத்துப் பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி வெந்நீரில் கலந்து குடித்து வர நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

  தினமும் ஒரு மஞ்சள் வாழைப்பழம் உண்டு வர குடற் புண்களை ஆற்றும். செவ்வாழை உயிரணுக்களைப் பெருக்கும். மலைவாழை மலச்சிக்கலைத் தீர்க்கும். பேயன் வாழை குடல் நச்சுக்களைத் துரத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.