முகப்பு
மகளிர்மணி

கரை சேர்க்க உதவினோம்! - நிஷா தொட்டா

""நான் இங்கிலாந்தில் பிஸியோதெரபிஸ்ட்டாக இருக்கிறேன். இதைத்தவிர முதியோர்களுக்கான "கேர் ஹோம்' வைத்து நடத்தி வருகிறேன்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

""நான் இங்கிலாந்தில் பிஸியோதெரபிஸ்ட்டாக இருக்கிறேன். இதைத்தவிர முதியோர்களுக்கான "கேர் ஹோம்' வைத்து நடத்தி வருகிறேன். தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக இங்கிலாந்துக்குச் சென்றேன். என் கணவருக்கும் அங்கேயே வேலை அமைந்துவிட்டதால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டோம். இருந்தாலும் நான் பிறந்த தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று மனதில் ஓர் உந்துதல் இருந்து கொண்டே இருந்தது. இதனால் சென்னைக்கு வந்து  "எக்ஸ்னோரா' அமைப்புடன் இணைந்து மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தேன். அதன்பிறகு தமிழ்நாட்டில், சென்னையில் 2011-இல் தனியாக "சுதா' என்கிற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன்'' என்கிறார் நிஷா தொட்டா. வெளிநாடுவாழ் இந்தியரான இவர் மேலும் கூறியது:

 ""சுதா அமைப்பின் மூலம் "வோடஃபோன்' நிறுவனத்துடன் இணைந்து  திடக் கழிவுகளை (நர்ப்ண்க் ரஹள்ற்ங் ம்ஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்) சேகரித்து அதனை பிரித்து மறுசுழற்சி செய்யும் பணியையும் செய்து வருகிறேன். இந்தப் பணியில்  தவறானப் பாதையில், சென்று வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மறுவாழ்வு மையம் மூலம் மீட்டெடுக்கப்பட்ட 137 பேருக்கும் மேல் பணிபுரிந்து வருகிறார்கள்.  ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட ஒன்றரை முதல் 2 டன் திடக் கழிவுகளைப் பிரித்து எடுத்து மறுசுழற்சிக்கு அனுப்புகிறோம். இதில் கிடைக்கும் வருமானத்தையும் அவர்களுக்கேப் பிரித்து கொடுத்துவிடுகிறேன்.

 இதைக் கேள்விப்பட்டு கேரளா அரசு அழைத்து திடக் கழிவு மேலாண்மை செய்து தரும்படி அழைத்திருந்தார்கள். அங்கு சென்று செய்து கொடுத்தேன். அதேப்போன்று  ராமநாதபுரம் கீழக்கரைக் கடற்கரையோரப் பகுதியில் செய்து கொடுத்தேன். இதைத்தவிர ஷார்ஜா நாட்டின் ஹம்ரியா துறைமுகத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியிலும் செய்து கொடுத்தேன். தற்போது மலேசியா மற்றும் ஹங்கேரியில் இருந்தும் அழைப்புகள் வந்திருக்கின்றன.

 இதற்கிடையில் இயற்கை பேரிடர்கள், முக்கிய நிகழ்வுகள் ஏற்படும்போது அரசுடன் இணைந்து எங்களது தொண்டு நிறுவனத்தின் ஆட்களோடு சென்று என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். கடந்த 2011-14 ஆம் ஆண்டுக்கான தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து எங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்தோம். அதாவது "இப்ங்ஹய் & ஊஹண்ழ்' என்ற தீமில் தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவுகளைத் திரையிட்டு காண்பித்தோம். 

இதையடுத்து 2012 - இல் "அடையார் கீரிக்' என்ற தீமை உருவாக்கி அதன் மூலம் -  க்ளீன் அடையாரை உருவாக்கினோம். மேலும் ஏஇக நிறுவனத்தின் உதவியோடு அண்ணாநகர், அம்பத்தூர் பகுதியில் இதுவரை 370க்கும் மேற்பட்ட சாலையோர மரக் கன்றுகளை நட்டிருக்கிறோம். தற்போது சென்னையில் உள்ள பல பகுதியிலும் மரக்கன்றுகள் நடுவதைத் தொடர்ந்து வருகிறோம். மேலும் இந்தப் பருவகாலத்தையொட்டி (தங்ஞ்ண்ய்ஹப் இங்ய்ற்ழ்ஹப் ழர்ய்ங், அய்ய்ஹய்ஹஞ்ஹழ்) அண்ணாநகர் - அம்பத்தூர் பகுதியில் மேலும் 370 செடிகளைப்  பயிரிட்டு பராமரித்து வருகிறோம். இதைத்தவிர ஞநத கஹய்க் -இல் 263 செடிகளைப் பாராமரிப்பதோடு மக்கள் பயன்பாட்டுக்காகப் பூங்காவாகவும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். இதையடுத்து தற்போது "க்ளின் மெரினா' என்ற தீமில் மெரினாக் கடற்கரைப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணியை கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கினோம். அதற்காக ஒரு வருடமாக சென்னையில் தான் இருந்து வருகிறேன்.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையினால் வேளச்சேரி, ராம்நகர், தாம்பரம் பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்து தத்தளித்தவர்களை எல்லாம்  தீயணைப்பு வீரர்களுடனும், மீனவர்களுடனும் இணைந்து மீட்புப் பணியில் எங்களால் முடிந்த உதவிகளை எல்லாம் மக்களுக்குச் செய்து கரை சேர்க்க உதவினோம். மேலும் எங்களுடன் "புட் பேங்க்'  அமைப்பும் இணைந்து அவர்களால் முடிந்தவரை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு உணவுகள் வழங்கி உதவினர். சிலர் வெளியே வர விருப்பமில்லாமல் தங்கள் வீடுகளிலேயே மாடிப் பகுதியில் தங்கிக் கொண்டனர். அவர்கள் விருப்பப்படி சிலருக்கு பால், அரிசி என  உணவுப் பொருட்களை வழங்கி உதவினோம். 

 இந்தப் பணியில் முதல்நாள் அரசு மூலம் மீட்புப் பணிக்காக 2 படகை வாடகைக்கு எடுத்தோம். ஆனால் அது போதவில்லை. இதனால் நீலாங்கரைப் பகுதிக்குச் சென்று மீனவர்களிடம் இருந்து மேலும் 8 படகுகளை வாடகைக்கு கேட்டோம். அவர்களோ மக்களின் நிலையைப் புரிந்து இலவசமாகவே  படகுகளை வழங்கியதோடு, அவர்களும் எங்களுடன் மீட்புப் பணியில் உதவினர்.

 இதையடுத்து அடுத்து வர இருக்கும் தேர்தலுக்கும் எங்களால் முடிந்த உழைப்பைக் கொடுக்க தயாராக இருக்கிறோம். இதன் ஒரு கட்டமாக தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிமுகம் செய்து உள்ள "வாக்காளர் அட்டை' தொடர்பான "ஸ்பெஷல் எலக்ஷன் சம்மரி' என்ற திட்டத்தில் இணைந்து  டெக்னிக்கல் சைடில்  எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். இந்த திட்டத்தின் மூலம் ஒருவர் தங்களுடைய வாக்காளர் அட்டையில் ஏதேனும் பிழை, திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் ஆண்டராய்ட் மொபைல் போன் மூலம் ஈசி அப்பை  டவுன்லோடு செய்து தங்களுக்குத் தேவையான திருத்தத்தையோ அல்லது புதிதாக வாக்காளர் அட்டைக்கு பதிவோ செய்து கொள்ள முடியும்.  இந்த முறையில் ஏற்கெனவே ஒருமுறை  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பதிவு செய்து வருபவர்களுக்கு வருகிற  ஜனவரி 24-ஆம் தேதிக்கு பிறகு இரண்டாம் கட்ட அறிக்கை வெளியிட உள்ளனர். மேலும் தற்போது பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என சோஷியல் மீடியாக்கள் அதிகம் வந்துவிட்டதால் சுதாவைப் பற்றி கேள்விப்பட்டு தற்போது நிறைய அழைப்புகள் வருகின்றன. இவை எல்லாவற்றிற்கும் எனக்கு அனுமதி அளித்து, ஊக்குவித்து,  என் மூன்று வயது குழந்தையையும் இங்கிலாந்தில் கவனித்து வரும் என் கணவருக்குத்தான் என் நன்றியை தெரிவிக்க ஆசைப்படுகிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.