முகப்பு
மகளிர்மணி

4ஜியும் சாஷாவும்!

குட்டையான தலைமுடி, அழகான முகம், துறு துறுவென்று பேச்சு... இத்தனைக்கும் சொந்தக்காரர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:45 AM
பகிர்:

குட்டையான தலைமுடி, அழகான முகம், துறு துறுவென்று பேச்சு... இத்தனைக்கும் சொந்தக்காரர். இவர் பெயர் தெரியாதவர்கள் இருக்கலாம்; ஆனால் இவரைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் வரும் ஏர்டெல் விளம்பரங்களில் மிகவும் அழகான இளம்பெண் ஏர்டெல் 4ஜி சேலஞ்ச் செய்து காட்டுவார் சாஷா செட்ரி. யார் இந்த இளம் பெண் என்று தெரிந்து கொள்வதற்காக கணினியை துளாவியபோது கிடைத்த தகவல் களிலிருத்து உங்களுக்காக...

""குறைந்த அளவு முடியுடன் தோற்றம் அளிக்கும் இவரின் சொந்த ஊர் டேராடூன். வயது 19. சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் கல்லூரியில் விளம்பரத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது காப்பி ரைட்டராக டிரெயினிங் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

சிறு வயதிலேயே இவருக்கு விளம்பர மாடலாக வேண்டும் என்ற தீராத ஆசை கொண்டிருந்தார். மேலும் பாடல்கள் எழுதும் திறமையுடைய இவருக்கு இசையிலும் அதிக நாட்டம் உண்டு எனவே முறைப்படி இசைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

இவர் பல விளம்பர நிறுவனங்களில் பதிவு செய்திருந்தார். அந்த நேரத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி விளம்பரத்திற்கு புதிய முகம் தேவைப்பட்டது. எனவே இந்த பொறுப்பை இந்நிறுவனம் "டாப் ரூட் இந்தியா' என்ற விளம்பர நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது.

 ஏற்கெனவே சாஷா இந்த விளம்பர நிறுவனத்திலும் பதிவு செய்திருந்தார். எனவே இந்த நிறுவனம் நடத்திய ஆடிஷனில் இவர் தேர்வானார். இதற்கு முன்னர் எந்தவிதமான டெலிவிஷனிலும் தோன்றியது இல்லை. எனவே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நீண்ட கூந்தல் கொண்ட இவர் இந்த விளம்பரத்திற்காக குட்டையாக வெட்டியுள்ளார். அது தற்போது இளம் பெண்களிடையே ஃபேஷனாக மாறியுள்ளது.

வழக்கமாக தங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்த மிகவும் பிரபலமானவர்களைத் தேடி அவர்களை விளம்பர தூதர்களாக நியமிப்பது வழக்கம். ஆனால் இவரே இந்த விளம்பரத்தின் மூலம் பிரபலமான இளம் பெண்ணாக மாறினார். இந்த அளவுக்கு பிரபலமாவோம் என்று அவர் எதிர்பார்க்கவில்லை எனவும் எதிர்காலத்தில் மும்பையில் குடியேறப்போவதாகவும் சாஷா ஷெட்ரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.