முகப்பு
மகளிர்மணி

சிறந்த போட்டியாளர்! மரியா சரபோவா

  ரஷிய தொழில் முறை டென்னிஸ் வீராங்கனை மரியா சரபோவா. இவருடைய முழுப்பெயர் மரியா யுர்யோவ்னா சரபோவா.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:45 AM
பகிர்:

  ரஷிய தொழில் முறை டென்னிஸ் வீராங்கனை மரியா சரபோவா. இவருடைய முழுப்பெயர் மரியா யுர்யோவ்னா சரபோவா.

  1987 - ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி பிறந்த இவரின் இன்றைய வயது 28. எடை 59 கிலோ.

  1994-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் குடியேறி வசிக்கிறார். வலது கை ஆட்டக்காரர்.

  உலக பெண்கள் டென்னிஸ் வீராங்கனைகளில் 3வது இடத்தில் இருப்பவர். முதல் இடம் செரினா வில்லியம்ஸ். இரண்டாவது வீனஸ் வில்லியம்ஸ்.

  2004- இல் 17 வயதில், விம்பிள்டன் போட்டியின் ஒற்றையர் ஆட்டத்தில் வென்று, ரஷியாவைச் சார்ந்த முதல்பெண் என்ற பெருமையைப் பெற்றுத் தந்தார்.  இதுவரை 35 ஒற்றையர் போட்டிகளில் பட்டம் பெற்றுள்ளார்.  5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார்.

   2003- 2015 வரை, ஆண்டுதோறும் ஒரு "ரபஅ' போட்டியிலாவது சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

   2001- இல் தொழில் முறை வீராங்கனையாக மாறினார்.  உலக டென்னிஸ் (பெண்கள்) அசோஸியேஷனால் 5 முறை நம்பர் 1 தகுதியுள்ளவர் என அறிவிக்கப்பட்டவர். ஒலிம்பிக்கில் வெள்ளி மெடல் பெற்றுள்ளார்.

  சரபோவாவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கிடைத்த வருமானம் 250 மில்லியன் டாலர். இந்த வருமானத்தில் பெரும் பகுதி விளம்பர மாடலிங்  மூலமே கிடைத்ததாகும்.  விளையாட்டின் மூலம் 6.7 மில்லியனும். விளம்பரங்கள் மூலம் 23 மில்லியனும் தற்போது கிடைத்து வருகிறது.

  2004- இல் விம்பிள்டனில் வெற்றி பெற்றதும், விளம்பர வாய்ப்பு தேடி வந்தது.  முதலில் "மோட்டோரோலா'  வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலருக்கு, கான்டிராக்ட் போட்டது. இப்போதும் இந்த நிறுவனத்திற்கு சரபோவா விளம்பரத்தை தொடருகிறார்.

  கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிக அதிக வருமானம் பெறும் 2 விளையாட்டு வீரர்களில் ஒருவராக இவர் உள்ளார். இவரைத் தவிர மற்றவர்களெல்லாம் ஆண்கள்.

  2005- ஆம் ஆண்டு முதல் தடவையாகவும். 2012 -இல் 5வது முறையாகவும், உலகின் பெண்கள் டென்னிஸில் முதல் இடத்தை தொட்டவர்.

  2008- இல் சோனி எரிக்ஸனும், 2012-இல் சாம்சங்கும் இவரை மாடலிங்கிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டன.  இதனால் டென்னிஸ் உலகில் மட்டுமல்லாமல், பேஷன் உலகிலும் மரியா சரபோவா பிரபலமானார்.  இதனால் லக்சரி பிராண்ட்டுகள் இவரைத்தேடி வந்தன.

   ஸ்விஸ் வாட்ச் தயாரிப்பாளர்  "tag heven' மற்றும் அமெரிக்காவில் நகை தயாரிப்பு  tiffany & co. தயாரிப்பு நிலையம் தங்கள் விளம்பரங்களுக்கு சரபோவாவை பயன்படுத்திக் கொள்ளமுன் வந்தன.

   இவற்றில் tiffany & co. நிறுவனம் இவருக்கென்றே, சில பிரத்யேக நகைகளை வடிவமைத்து, கொடுத்து, அவற்றை அவர் பங்கேற்கும்  அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் அணிந்து வரவேண்டும் என கேட்டுக் கொண்டன.

  பிரபலமானால்... டிமாண்ட் மேலும் மேலும் கூடுமே? அடுத்து வாகன நிறுவனங்களும் அவரை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தன.

   2006 -இல் "லேண்ட்ரோவர்' வாகன நிறுவனமும், 2013 -இல் போர்சி  நிறுவனமும் இவரை விளம்பர மாடலாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன.

  2012 -இல் ஸ்டுட்கார்ட்டில் (ஜெர்மனி) நடந்த டென்னிஸ் போட்டியில் ஜெயித்ததும், ஜெர்மானிய நிறுவனங்களும் இவரைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன.

  இவர் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேடெட் இதழுக்கு ஸ்விம்மிங் சூட்டில் போஸ் கொடுத்தது பிரச்னையாகி பிறகு அமுங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.