முகப்பு
மகளிர்மணி

டிப்ஸ்...

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:52 AM
பகிர்:

<  மிக்ஸியைவிட கிரைண்டரையே அதிகம் உபயோகியுங்கள். ஏனெனில் கிரைண்டரை விட அதிக அளவில் கரண்ட் இழப்பது மிக்ஸியே.

<  கைவிரல்களில் சிறுதுண்டு கண்ணாடி குத்தி எடுக்க வராவிட்டால் சிறிது பெவிக்கால் பசையை லேசாகத் தடவி காயவைக்கவும். நன்கு காய்ந்தபிறகு மெதுவாக பெவிக்காலை உரித்து எடுங்கள். அதனுடன் கண்ணாடித் துண்டும் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.

<  எல்லாவித வேலைகளுக்கும் ஒரே மாதிரியாக சக்தியை நாம் செலவழிப்பதில்லை. மாடிப்படிகளில் ஏறி இறங்குவதற்குத்தான் மிக அதிகமான சக்தி செலவழிகிறது. 800 கலோரிகள். தரையைப் பெருக்கித் துடைக்க 200 கலோரிகளும், சாப்பாடு தயார் செய்தல், துணிமணிளுக்கு இஸ்திரி போடுதல் இவை இரண்டிற்கும் தலா 100 கலோரி சக்தியும் செலவழிகிறது.

<  விருந்துகளின் போது தலைவாழை இலையில் இலையை எப்படி போடுவது என்பது பலபேருக்கு தெரியாது. தலைவாழை இலையின் வெட்டப்பட்ட பகுதி வலதுபக்கம் இருக்குமாறு இலையைப் போட வேண்டும்.

<  கையைத் துடைக்கும் மென்மையான டிஷ்யூ பேப்பரால் மூக்குக் கண்ணாடியைத் துடைத்தால் கறைகள் அகன்று மூக்குக் கண்ணாடி பளபளப்பாகும்.

<  இன்ஸ்டன்ட் காபிப் பொடிகளை பிரிக்கும்போது கவரின் வாய்ப்பகுதியை மட்டும் லேசாகப் பிரித்துவிட்டு அதனை காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் கடைசி வரை கெட்டியாகாது, கெட்டும் போகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.