முகப்பு
மகளிர்மணி

சமையலறை டிப்ஸ்

எப்பொழுது காஸ் அடுப்பை அணைப்பதானாலும் முதலில் சிலிண்டரை மூடிவிட்டு மேலே அணையுங்கள். ஒவ்வொரு தடவையும் குழாயில் இருக்கும் எரிவாயு வீணாகாமல் இருக்கும். எரிவாயுவும் ஒருவாரம் அதிகமாகவரும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:55 AM
பகிர்:

<   எப்பொழுது காஸ் அடுப்பை அணைப்பதானாலும் முதலில் சிலிண்டரை மூடிவிட்டு மேலே அணையுங்கள். ஒவ்வொரு தடவையும் குழாயில் இருக்கும் எரிவாயு வீணாகாமல் இருக்கும். எரிவாயுவும் ஒருவாரம் அதிகமாகவரும்.

<  புளியை வாங்கி வந்ததுமே அதிலுள்ள கொட்டையையும், நார்களையும் நீக்கிவிட்டு, நன்கு வெயிலில் காயவிட்டு சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்து வைத்துவிட்டால் ஒரு வருடத்திற்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.

<  டப்பாவில் புதிய சாமான்களைப் போடுவதற்கு முன்னால் பழையச் சாமான்களை ஒரு பாலிதின் கவரில் போட்டு கவருடன் டப்பாவின் மேலாக வைத்திருந்து முதலில் அதை உபயோகித்து விட வேண்டும்.

<  இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சமைக்கிற எந்த உணவிலும் இஞ்சி 40 சதவிகிதமும் பூண்டு 60 சதவிகிதமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

<  இஞ்சி, பூண்டு விழுது அரைத்து மொத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் இஞ்சி, பூண்டு விழுதுடன் உப்புத் தூளும், ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெய்யும் விட்டுக் கலந்து வைத்தால் கூடுதலான நாள்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.