முகப்பு
மகளிர்மணி

இரட்டையரின் திறமை!

இன்றைய சூழ்நிலையில் கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக் கொள்ளவும், கற்ற வித்தையை மெருகேற்றி மேடையில் பாடவும் பல நுழைவாசல்கள் உள்ளன,

Updated On : 27 அக்டோபர், 2015 at 3:11 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:34 PM

இன்றைய சூழ்நிலையில் கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக் கொள்ளவும், கற்ற வித்தையை மெருகேற்றி மேடையில் பாடவும் பல நுழைவாசல்கள் உள்ளன, கற்பதற்கு ஓர் ஆசான் என்றால், அதை மேலும் மேம்படுத்திக் கொள்ள யூடியூப், ஸ்கைப் போன்ற சாதனங்கள் இருக்கின்றன.

இன்னொன்று முன்பெல்லாம் பாட்டு என்றால், வானொலி மற்றும் சபா மட்டும்தான். சபாவிலும் முழு நேரக் கச்சேரி. இன்று அப்படியா?

எத்தனை வடிவங்கள் நிலவுகின்றன? இவை யாவுமே இளம் கலைஞர்களுக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட்கள்தான். அதே சமயம் போட்டியும் கடுமையாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.  இத்தகைய நிலைமையில் இளம் கலைஞர்களான அனாஹிதா, அபூர்வா  ரவீந்திரன் இரட்டையரின் திறமை வியக்க வைக்கிறது. தங்களைப் பற்றி இருவரும் சொன்னது:

Advertisement

எங்கள் இரண்டு பேருக்குமே குரு தந்தை வழிப்பாட்டி சாந்தி ஜெயராமன்தான். பின்னர் ரவிகிரண் சாரிடம் சேர்ந்து பயின்று வருகிறோம். சித்ர வீணை, வாய்ப்பாட்டு, வயலின் எல்லாவற்றிலும் அவர் புகழ்பெற்றவர். கீர்த்தனைகள் இயற்றுவதிலும் புலமை உண்டு.

 ஒருமுறை ரவிகிரண் சார் எங்களை வைஜெயந்திமாலா பாலியைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அங்கே, பலர் பாடிக் கொண்டிருந்தனர், செவி மடுத்த வண்ணமிருந்தார்,  வைஜெயந்திமாலா. என்னையும் (அனாஹிதா) பாடச் சொன்னார். நான் பாடுவதில் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு என்னைத் தன் குழுவில் இணைத்துக் கொண்டார்.

 நாட்டிய நிகழ்ச்சியில் பாடுவது தனி வடிவம். ஜதிகள், முகபாவம் போன்ற பலவற்றை கவனித்து அதற்கு ஏற்றாற் போல், ஜாவனி பதம் பாட வேண்டும். மேடையேறி பாடுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.