முகப்பு
மகளிர்மணி

ஒரே நாளில் 14 புத்தகங்கள்!

சாதனை புரிய வேண்டும் என்றால் ஆர்வம், தேடல், தாக்கம், கடின உழைப்பு வேண்டும். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த த.மாலா பிரிய

Updated On : 29 செப்டம்பர், 2015 at 3:58 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:20 PM

சாதனை புரிய வேண்டும் என்றால் ஆர்வம், தேடல், தாக்கம், கடின உழைப்பு வேண்டும். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த த.மாலா பிரிய தர்ஷினி ஒரே நாளில் ஒரே மேடையில் தான் எழுதிய 14 புத்தகத்தை வெளியிட்டு சாதனை புரிந்துள்ளார்.

புதுக்கவிதை தொகுப்பு, காதல் கவிதை தொகுப்பு, சமூக கவிதை தொகுப்பு, இடைநிற்றல் பள்ளிக்கு செல்லா குழந்தைகள் குறித்த கவிதை தொகுப்பு என ஐந்து கவிதை தொகுப்பும், காய்களின் மருத்துவக் குணங்களின் தொகுப்பு,  குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பு புத்தகம் என 14 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் மாலா பிரியதர்ஷினி. இது எப்படி சாத்தியப்பட்டது என அவரிடம் கேட்டோம்:

""நான் 12 வயதில் பள்ளியில் படிக்கும்போது, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி , கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளேன்.

Advertisement

பின்னர் 18 வயதில் கல்லூரியில் சேர்ந்ததும், சிறு, சிறு கவிதைகளை எழுத தொடங்கினேன், பின்னர் பத்து ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டது. 2012ஆம் ஆண்டு என்னுள் நீருபூத்த நெருப்பாக இருந்த எழுத்து ஆர்வம்,  எழுதத் துண்டியது. பத்து நூல்கள் பிரசுரத்திற்கு தயாராக இருந்தபோது, அவற்றை பிரசுரிக்க பொருளாதார சிக்கல் எழுந்தது.

நான் எழுதியுள்ள14 புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் இரண்டாம் பதிப்பாகும்.

விருதுநகர் மாவட்ட வட்டார வழக்கு மொழி குறித்து ஆய்வு செய்து வருகிறேன். விரைவில் இது குறித்த நூலும் வெளியிட உள்ளேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.