நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்! சொல்கிறார் : பி.ஜெனிபர் பிலிப்
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் உள்ள சூரியோதயா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார் பி.ஜெனிபர் பிலிப். இந்தப் பள்ளியில் ஏழை-எளிய
மகளிர்மணிநல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்! சொல்கிறார் : பி.ஜெனிபர் பிலிப்
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் உள்ள சூரியோதயா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார் பி.ஜெனிபர் பிலிப். இந்தப் பள்ளியில் ஏழை-எளிய
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் உள்ள சூரியோதயா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார் பி.ஜெனிபர் பிலிப். இந்தப் பள்ளியில் ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த 350 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் மாற்றுத்திறனுடைய மாணவர்கள் 7 பேர்.
மக்கள் நலவாழ்வு அறக்கட்டளையுடன் பள்ளி நிர்வாகம் இணைந்து பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இதன்படி, பள்ளியின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் பள்ளியில் பயின்று இப்போது மருத்துவர்களாக உள்ள முன்னாள் மாணவர்களின் துணையோடு 5 பொது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுதவிர, டெங்கு, போக்குவரத்து, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை தொடர்பான அரசு அறிவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுவருகின்றனர்.
மாணவர்களுக்கு வாரத்துக்கு 2 நாள் கராத்தே பயிற்சி, தினமும் 10 நிமிடங்கள் யோகா பயிற்சி, பரத நாட்டியம், ஓவியம், இசை, ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி, பாட்டு, சிலம்பம், நீதிபோதனை வகுப்புகள் உள்ளிட்ட தனித் திறன் பயிற்சிகள் பயிற்சியாளர்கள் வாயிலாக அளிக்கப்படுகின்றன.
மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு காய்கறிச் செடிகள் வழங்கப்படுகின்றன. இவற்றைப் பெறுவோர் சில மாதங்கள் கழித்து, தாங்கள் வீட்டில் விளைவித்த காய்கறிகளை எடுத்து வந்து ஆசிரியர்களிடம் காண்பித்து மகிழ்ச்சியும் அடைகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள மரங்கள், மரக்கன்றுகளுக்கு மாணவர்கள் சிலரின் பெயரைச் சூட்டி பராமரிக்கச் செய்யும் பணியையும் பள்ளி நிர்வாகம் ஒப்படைத்து வருகிறது.
ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு சத்தான இயற்கை உணவை அளித்தல், குறைந்த செலவில்-நிறைந்த தரத்தில் பாரம்பரிய இயற்கை உணவை சாப்பிடுதல், 3 மாதங்களுக்கு ஒரு முறை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துதல், பெற்றோர்களுக்கும் ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தி பரிசளித்தல், மாதம்தோறும் 3-வது வியாழக்கிழமைகளில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்துதல்... என மருத்துவப் பணிகளும், கல்விப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
மாணவர்கள் மாலையில் பயிலும் வகையில் பள்ளி சார்பில் பட்டதாரிகள் சிலரை தேர்ந்தெடுத்து ஊக்கத் தொகை அளித்து, 6 இடங்களில் மாலைநேர வகுப்புகளையும் பள்ளி நிர்வாகம் நடத்திவருகிறது.
இதுகுறித்து பி.ஜெனிபர் பிலிப்பிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
தொடக்கக் கல்வியை சந்தப்பேட்டையில் உள்ள வள்ளலார் பள்ளியிலும், உயர்நிலைப் படிப்பை நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். பின்னர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி படிப்பை பயின்றேன். இளம் வயதிலேயே சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. வள்ளலார் பள்ளியின் ஆசிரியர்கள் அதற்காக வழியும் காட்டினர்.
படிக்கும்போதை கோ-கோ, ஓட்டம், பேச்சு, பாட்டு, கட்டுரை, ஓவியம், கோலம், நடனம், இசை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளையும் பெற்றேன். நான் பெற்ற கல்வியை, பயிற்சியை, திறமைகளை பிறருக்கு உதவிடும் வகையில் ஆசிரியர் பணியை தேர்வு செய்து, நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, இந்தப் பணியைத் தேர்வு செய்தேன்.
இதையடுத்து, 1994-ஆம் ஆண்டு தொடக்கக் கல்வியைப் பயின்ற வள்ளலார் பள்ளியிலேயே ஆசிரியர் பணியைத் தொடங்கினேன். இதையடுத்து, 1996-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. பின்னர் எனது மாமனார் ஜோசப் விக்டர் நிர்வாகியாக நடத்திவந்த, சூர்யோதயா பள்ளியில் ஆசிரியர் பணிக்கு மாறினேன். 2003-இல் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன்
இடைப்பட்ட காலத்தில் 2002-ஆம் ஆண்டில் எனது கணவர் பிலிப் பக்த பிரசன்னாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் பாதிப்படைந்தேன். இது உள்மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியதால், பலருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் சிறகைவிரித்து பறந்தது.
ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தரமான கல்வியை அளித்து, நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களாக்க முடிந்த அளவுக்கு உதவிவருகிறேன்.
மாணவர்களுக்கு கல்வியோடு உடல்நலத்திலும், தனித்திறன்களை மேம்படுத்துதலும் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டுவருகிறேன்.
பள்ளியின் செயலர் பிலிப் பக்த பிரசன்னாவும், பள்ளியின் 10 ஆசிரியர்களும் இந்தப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்றார்.