முகப்பு
மகளிர்மணி

பாக்கெட் நொறுக்குத்தீனி வேண்டவே, வேண்டாம்!

சிவகாசியில் உள்ள ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பாக்கெட் நொறுக்கு தீனி வகைகளை மாணவர்கள் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். மாறாக முளைகட்டிய

Updated On : 14 ஜூன், 2016 at 3:55 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:00 PM

சிவகாசியில் உள்ள ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பாக்கெட் நொறுக்கு தீனி வகைகளை மாணவர்கள் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். மாறாக முளைகட்டிய பயிறு, சுண்டல் உள்ளிட்டவைகளை தின்பண்டமாக கொண்டு  வரவேண்டும் என உத்தரவிட்டு அதனை நடை முறைப்படுத்தியும் வருகிறார்கள். இது குறித்து பள்ளியின் முதல்வர் எஸ்.சித்ரா ஜெயந்தியிடம் கேட்டபோது:

""2006- ஆம் ஆண்டு முதல் இதனை கடைப்பிடித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆரம்பிக்கும் முன்னர் பெற்றோர்களையும், அவர்களது பிள்ளைகளையும் பள்ளிக்கு அழைத்து கூட்டம் போடுவோம். அதில் மாணவ மாணவிகளுக்கு பாக்கெட் நொறுக்குத்தீனி, கடைகளில் சுடப்படும் எண்ணெய் பலகாரங்கள் கொடுத்து விடக்கூடாது என அறிவுறுத்துவோம். அதற்கு மாற்றாக முளைகட்டிய பயிறு, சுண்டல், பழங்கள், காய்கறி சாலட் உள்ளிட்டவைகளையே கொடுத்தனுப்ப வேண்டும் என கூறிவருகிறோம்.

இதற்கு பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.  ஒரு சில பெற்றோர்கள் அனைத்து மாணவர்களையும் எப்படி ஆசிரியர் கவனிப்பார் என நினைத்து பாக்கெட் நொறுக்குத்தீனியை கொடுத்தனுப்புவார்கள். ஆனால் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் டிபன் பாக்ûஸயும் ஆசிரியர் திறந்து பார்த்து, அதில் பாக்கெட் நொறுக்குத்தீனி இருந்தால், மாலையில் பெற்றோர்களிடம் இனி இதனை கொடுத்து விடாதீர்கள் என கூறி திருப்பி அனுப்பிவிடுவோம்.

Advertisement

இதனால் பெற்றோர்கள், நாங்கள் அனுமதிக்கும் தின்பண்டங்களையே கொடுத்தனுப்புகிறார்கள். மாணவர்களின் படிப்பில் அக்கறை காட்டுவதைப் போன்று அவர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம்'' என்றார்.

இது குறித்து பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவி கே.மகஸ்ரீயிடம் கேட்டபோது:

""பள்ளி ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு, எனது பெற்றோர்கள் சுண்டல், பழங்கள்தான் கொடுத்தனுப்புகிறார்கள். பாக்கெட்களில் உள்ள தின்பண்டங்களை உண்பதற்கு ஆசையாக இருந்தாலும், பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது என கூறுவது நல்லதுக்கு தானே என நினைக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.