வீட்டு வைத்தியம்
நமது உடம்பின் பல உறுப்புகள் சிறப்பாக வேலை செய்வதற்கு குறைந்தபட்சம் 15 மில்லி கிராம் வைட்டமின்-உ அவசியம். வைட்டமின் - உ செல் அழிவையும் தடுக்கும். நாம் சாப்பிடும்
நமது உடம்பின் பல உறுப்புகள் சிறப்பாக வேலை செய்வதற்கு குறைந்தபட்சம் 15 மில்லி கிராம் வைட்டமின்-உ அவசியம். வைட்டமின் - உ செல் அழிவையும் தடுக்கும். நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் பாதாம் பருப்பு, சூரியகாந்தி எண்ணெய், வேர்கடலை, தக்காளி இவற்றில் வைட்டமின் - உ அதிகம் உள்ளது.
அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுகிறதா? இதற்கு காரணம் போதியளவு நீர் குடிக்காததுதான். ஆக தண்ணீர் நிறைய குடியுங்கள். அதுவே சிகிச்சையளித்து அடிக்கடி தசை பிடிப்பு ஏற்படுவதை தடுத்துவிடும்.
அடிவயிற்றில் வலியா? அதனை குறைக்க, இஞ்சியை சாரெடுத்து வெது வெதுப்பான வெந்நீரில் கலந்து இரண்டு தேக்கரண்டி அளவுக்கு அருந்துங்கள். இந்த பிரச்னையிலிருந்து விடுதலை பெற்றுத்தந்துவிடும்.
மூக்கிலிருந்து நீர் கொட்டுகிறதா? இதனை குறைக்க, வெங்காயத்தை வெட்டி, அதன் அடி பகுதியை மூக்கின் அருகே வைத்து சில நிமிடங்கள் நுகர்ந்தால், நல்ல குணம் தெரியும்.
பாத்ரூம் டாய்லெட்டைவிட, கதவு மற்றும் கைப்பிடி ஆகியவற்றில் கிருமியின் தாக்கம் அதிகம் இருக்கும். அதனால் டாய்லெட்டை அவ்வப்போது சுத்தம் செய்யும்போது அத்துடன் டாய்லெட் கதவு மற்றும் கைப்பிடியையும் கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.