தர்ப்பூசணி இஞ்சி ஜூஸ்
தேவையானவை:
தர்ப்பூசணிப் பழம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு.
சர்க்கரை - 2 தேக்கரண்டி
செய்முறை: தோல், விதைகள் நீக்கிய தர்ப்பூசணிப் பழத்தைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன், இஞ்சி, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும். தர்ப்பூசணி ஜூஸ் ரெடி. விருப்பமுள்ளவர்கள் ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.
ஜவ்வரிசி ஜிகர்தண்டா
தேவையானவை:
பால் - 1 டம்ளர்
ஜவ்வரிசி - 2 மேசைக் கரண்டி
பாதாம் பிசின் - ஒரு தேக்கரண்டி
ரூ ஆப்சா எசன்ஸ் (பிளைன் கடல்பாசி) - 2 மேசைக் கரண்டி
வெண்ணிலா ஐஸ்கிரீம் - ஒரு குழிக்
கரண்டி
சர்க்கரை - தேவைக் கேற்ப
பிஸ்தா - அலங்கரிக்க
செய்முறை: பாதாம் பிசினை இரவே ஊற வைக்கவும். ஜவ்வரிசியைப் பத்து நிமிடம் ஊற வைத்து, பாலுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் ஆற வைத்து அத்துடன் ஊறிய பாதாம் பிசின், மற்றும் ரூஆப்சா எசன்ஸ், தேவையான சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். குடிக்கும் போது ஐஸ்கிரீம் மற்றும் தூள் செய்த பிஸ்தா சேர்த்தும் பருகலாம்.
குறிப்பு: இது வெயில் நேரத்தில் வயிற்றுக்கு இதமாக குளு குளு என்று இருக்கும். ஜவ்வரிசி வயிற்றுப் புண்ணிற்கு அருமருந்தாகும். அல்சர், வயிறு எரிச்சல் உள்ளவர்கள் ஜவ்வரிசிப் பால் அல்லது ஜிகர்தண்டா செய்து அடிக்கடி குடித்தால் வயிறு குளுமை அடைவதோடு புண்ணையும் அடியோடு அகற்றும். வாயில் வரும் கொப்புளங்கள், வாய்ப் புண்ணிற்கும் இந்த ஜிகர்தண்டா நல்லது.
***
ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி
தேவையானவை:
தயிர் - 1 கிண்ணம்
ஸ்ட்ரா பெர்ரி - 1 கிண்ணம்
சர்க்கரை - 50 கிராம்
ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் - 1 துளி
செய்முறை: முதலில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி, தயிர், சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு டம்ளரில் ஊற்றிக் கொண்டு அதில் ஒரு துளி ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.
***
மிக்ஸ்ட் புரூட் ஜூஸ்
தேவையானவை:
கமலா, ஆரஞ்சு சுளைகள் - அரை கிண்ணம்
ஆப்பிள் துருவல் - அரை கிண்ணம்
பைனாப்பிள் - அரை கிண்ணம்
இஞ்சிச் சாறு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 3/4 கிண்ணம்
தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை: கமலா - ஆரஞ்சு, பைனாப்பிள், ஆப்பிள் துண்டுகள், சர்க்கரை சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும். அத்துடன் இஞ்சிச் சாறு கலந்து பரிமாறவும்.
***
தக்காளி ஜூஸ்
தேவையானவை:
நன்கு பழுத்த
தக்காளி - 3
தண்ணீர் - 1 டம்ளர்
சர்க்கரை - 4 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
புதினா - 4-5 இலை
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை: தக்காளியைக் கழுவி சுத்தம் செய்து, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து கலக்கி புதினா தூவி பரிமாறவும்.
***
ட்ரை நட்ஸ் மில்க் ஷேக்
தேவையானவை:
பாதாம் - 4
பிஸ்தா - 4
அக்ரூட் - 4
முந்திரி - 4
பேரீச்சம் பழம் - 2
பால் - 1 டம்ளர்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
செய்முறை: பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி ஆகியவற்றை தண்ணீர்விட்டு ஊறவைத்துக் கொள்ளவும். பிறகு பாலை காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். பின்னர் ஊறிய பருப்பு வகைகளின் தோலை நீக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அடித்துக் கொள்ளவும். அத்துடன் சர்க்கரை, பால் சேர்த்துக் கொண்டு, இந்தக் கலவையை மீண்டும் மிக்ஸியில் சுழற்றி எடுத்து பருகலாம். சூப்பர் டேஸ்ட், சூப்பர் சத்து!
****
கேரட் மில்க் ஷேக்
தேவையானவை:
கேரட் - 200 கிராம்
பால் - 1 கிண்ணம்
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி
பாதாம் - 5
செய்முறை: கேரட்டைத் தோல் சீவி, சிறு துண்டாக நறுக்கி ஆவியில் வேக விடவும். வேக வைத்த கேரட்டுடன் சிறிது பால், சர்க்கரை, ஊற வைத்து தோல் உறித்த பாதாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து அதில் மீதி உள்ள பால், ஏலக்காய்ப் பொடி சேர்த்து பரிமாறவும்.
****
கொய்யா சர்பத்
தேவையானவை:
கொய்யா பழம் - 5
சர்க்கரை - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
கோவா எசன்ஸ் - 4 துளிகள்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை: தேவையான அளவு தண்ணீரில் நறுக்கிய கொய்யாப் பழங்
களைப் போட்டு, நன்கு வேக விடவும். பிறகு வெந்த பழத்துடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அத்துடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, எசன்ஸ் சேர்த்து வடிகட்டி, குளிர வைத்து பரிமாறவும்.
****
எலுமிச்சை நன்னாரி சர்பத்
தேவையானவை:
எலுமிச்சை - பாதி அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நன்னாரி எசன்ஸ் - 2 தேக்கரண்டி
பாதாம் பிசின் - 1 தேக்கரண்டி
செய்முறை: எலுமிச்சைச் சாறு, நன்னாரி எசன்ஸ், பாதாம் பிசின் போட்டு அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து பருகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.