முகப்பு
மகளிர்மணி

எனது வெற்றிக்கு தாயே காரணம்! சொல்கிறார் : டீனா டாபி

இந்திய அரசு  பணி  தேர்வில் முதலாவதாக  தேர்வு செய்யப்பட்டிருக்கும் டீனா டாபி...

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

இந்திய அரசு  பணி  தேர்வில் முதலாவதாக  தேர்வு செய்யப்பட்டிருக்கும் டீனா டாபி...

"எனக்கு பேச்சு வரவில்லை.. ' என்று மகிழ்ச்சியில்  ஆனந்தத்தில்  வெடித்தார்  டில்லியைச்   சேர்ந்த  டீனா  டாபி. தொடர்ந்து டில்லி கோல் மார்க்கெட்  பகுதியில்  வசிக்கும்  டீனாவின்  வீட்டில் கொண்டாட்டம்  குதூகுலம்தான். 

சென்ற ஆண்டு நடந்த  இந்திய அரசுப் பணி தேர்வு எழுதியவர்கள் நாலரை லட்சம் பேர்.  தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 15,008 பேர். நேர்முகத் தேர்வுக்கு  அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2797.  இந்திய அரசுப் பணிக்காகத்  தேர்வுசெய்யப்பட்ட  1078  பேரில்  முதல் முயற்சியிலேயே முதலாவதாக  வந்திருப்பவர்தான்  டீனா.  டில்லி "லேடி  ஸ்ரீராம்  கல்லூரி'யின் மாணவி. பொலிடிகல் சயன்ஸ் பட்டதாரி. 22 வயது டீனா டாபி கூறுகிறார்:

""இந்திய  அரசுப் பணி  தேர்வில்  முதலாவதாக  வர  வேண்டும் என்று  கனவு  கண்டதுண்டு.. அது நனவாகும்  என்று  கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஏனென்றால் தேர்வும் சரி,  நேர்முக வடிகட்டலும்  சரி ரொம்பவும் கடினமாக இருந்தது. ஹரியாணா மாநிலத்தில்  பணி புரிய விரும்புகிறேன்.  ஹரியாணா மாநிலத்தில்  வேலை செய்யும் பெண்களின்  எண்ணிக்கை  மிகவும் குறைவு.  பால் வேற்றுமை அதிகம்  உள்ள மாநிலம்  ஹரியாணா.  பெண் ஆணுக்கு  சமமில்லை  என்ற அந்தக் கால  சமூக சிந்தனைத் தாக்கத்திலிருந்து  இன்னமும் ஹரியாணா விடுபடவில்லை.

ஆண்கள்   ஜனத்தொகையுடன்  ஒப்பிடும்  போது  பெண்கள் ஜனத்தொகை  குறைவாக  உள்ள  மாநிலம்  ஹரியாணா..  ஹரியாணா பெண்களுக்கு  ஏதாவது செய்ய வேண்டும். அவர்களை  உயர்த்த வேண்டும்.   அதனால்  ஹரியாணாவில் பணி புரிய விரும்புகிறேன்.

பெண்களுக்கு  வல்லமை தரப்பட வேண்டும். என்னை அப்படித்தான்  என் அம்மா வளர்த்தார். இன்றைய வெற்றிக்குக்  காரணம்  என் அம்மாதான். அவர் இல்லை என்றால்  நான் இந்த உச்சத்தைத் தொட்டிருக்க முடியாது.

அம்மா  ஹிமாலி,  பொறியாளராகப் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அப்பா ஜஸ்வந்த்  தொலைபேசித் துறையில் இப்போதும் அதிகாரியாகப் பணி புரிகிறார்.

நான்  குடும்பத்தின்  மூத்த மகள். என் தங்கை ரியா  பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கிறார்''  என்கிறார் டீனா.

ஆனால் டீனாவின் தாயார்  ஹிமாலி,  "என் மகள் டீனா  தான்  என்  ஹீரோ' என்கிறார்.  சொல்வதுடன் நிற்காமல், ஙஹ்  க்ஹன்ஞ்ட்ற்ங்ழ்,  ம்ஹ்   ட்ங்ழ்ர்  என்று  பொறிக்கப்பட்ட  வில்லையையும்  (க்ஷஹக்ஞ்ங்)  சேலை மீது குத்தி வைத்திருக்கிறார். டீனாவுக்கு  மாற்று இல்லை  என்று அவர் பெருமைப் பட்டுக் கொள்வதில்  அர்த்தம் உள்ளது.

 ""இந்திய அரசுப் பணி  தேர்வு  முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது  நான் உறக்கத்தில் இருந்தேன்... என்னைப்  பாராட்ட  தொடர்ந்து   முழங்கிய  தொலைபேசியின் அழைப்பு மணி ஓசை கேட்டு  தூக்கம் களைந்து  எழுந்தேன். நல்ல சேதி கிடைத்தது. மகிழ்ச்சி என்  குடும்பத்தைத்  தொத்திக்  கொண்டது'' என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →