மகளிர்மணி

தேன் மருத்துவம்!

DIN

* தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

* தேனும், வெந்நீரும் கலந்து அருந்திவர பருத்த உடல் மெலியும். ஊளைச்சதை குறையும்.  உடல் உறுதி அடையும்.

* அடிக்கடி சளி பிடித்தால் இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் தேன்கலந்து தினமும் பருகிவர நல்ல பலன் தெரியும்.

* உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டுவர உடல்வாகு சீராகும்.

* தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டுவர பார்வை பிரகாசமடையும்.

* சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டு வர, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றிற்கு  நிவாரணம் கிடைக்கும்.

* அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில்  தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்த சுத்தியும், இரத்தவிருத்தியும் 
ஏற்படும். நரம்புத்தளர்ச்சியும் நீங்கிவிடும்.
 - எச். சீதாலட்சுமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT