மகளிர்மணி

19 ரூபாயில் படம்...!

தினமணி

"சிங்கம்', "வேலையில்லா பட்டதாரி' என மெகா ஹிட்டானப்  படங்களின் இரண்டாம் பாகம் வெளிவரும் சீஸன் இது. இந்த வரிசையில் இடம் பிடிக்கிறது "மதுரை டூ தேனி வழி: ஆண்டிப்பட்டி.' கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. போட்டோ அண்ட் வீடியோ கிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் இப்படம் தயாராகி வருகிறது. விஷ்வக், சிவகாசி பாலா, சௌமியா, தேஜஸ்வி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஷுவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு மாணவர்களும்,  ஒரு மாணவியும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்களின் அந்தப் படம் இயக்கும் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே இதன் கதை. காமெடி, காதல், குடும்ப சென்டிமெண்ட் கலந்து தேனியிலிருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஸ்யங்களோடு உருவாகியுள்ளது திரைக்கதை. மேலும் தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக தியேட்டர்களில் வெறும் 19 ரூபாயில் படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் விதமாக ஒரு மிகப்பெரிய முயற்சியை நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் இப்படம் மூலம் செய்யவுள்ளது. மே மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தை ரசிகர்கள் தியேட்டரில் 19 ரூபாய் என்கிற மிகக்குறைந்த கட்டணத்தில் பார்த்து ரசிக்கலாம். ஒளிப்பதிவு செய்து கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.பி.எஸ்.குகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT