மகளிர்மணி

பொட்டு வைத்த முகமோ...!

DIN

•ஏறு நெற்றி கொண்ட பெண்கள் பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அளவு சிறியதாகத் தெரிந்து அழகு கூடும்.
•சிறிய நெற்றியைக் கொண்ட பெண்கள் இரு புருவங்களுக்கு மத்தியில் சிறிய பொட்டு வைப்பது அழகு தரும்.
•சதுர முகம் உடையவர்கள் கொஞ்சம் பெரிய அளவிலான பொட்டு வைக்கலாம். நீளமான மற்றும் அகலம் குறைந்த அளவிலான பொட்டுகள் இவர்களுக்குப் பொருந்தாது.
•வட்ட முகம் கொண்டவர்களுக்கு நீளமான பொட்டுகளே ஏற்றது. அது முகத்தை சற்று நீளமாகக் காட்டி அழகு சேர்க்கும்.
•முக்கோண வடிவ முகம் கொண்டவர்களுக்கு எல்லா பொட்டுகளும் பொருந்தும். இவர்களது நெற்றி அகலமாக இருந்தால் நீள வடிவ பொட்டுகளைப் பயன்படுத்தலாம்.
•பொட்டுகள் முக வடிவத்துக்கு மட்டுமன்றி உடைகள் மற்றும் உடல் நிறத்துடனும் தொடர்புடையது. கோதுமை நிறமுடைய பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருந்தும்.
•கோயிலுக்கு செல்லும்போது சாந்து பொட்டு, குங்குமப் பொட்டு, சந்தனப் பொட்டு வைக்கலாம்.
•திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது கல் வைத்த பொட்டுகளைத் தேர்வு செய்து வைக்கலாம்.
•ஒரு சில பெண்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு, சாந்து பொட்டு போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தி அந்த இடம் கருத்துவிடும். எனவே, ஒவ்வாத பொட்டுகளைத் தவிர்ப்பது நல்லது.
- சரஸ்வதி பஞ்சு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT