மகளிர்மணி

கர்ப்பமும் எடையும்!

தினமணி

* பொதுவாக சராசரியான எடையுள்ள ஒரு பெண், கர்ப்பத்தின் போது அதிக பட்சமாக 11-16 கிலோ வரை எடை கூடுகிறார்.  கூடுதல் எடை கொண்ட கர்ப்பிணிகள், மேலும் எடை கூடுவதை 6-10 கிலோவுக்குள் பராமரிக்க வேண்டும்.
* எடை குறைவாக உள்ள பெண்கள் அதேசமயம் 12-18 கிலோ வரை எடை கூடும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். 
* கர்ப்பமாகியிருக்கும்போது,  போதுமான அளவு எடை  அதிகரிக்கவில்லையென்றால், அது பிறக்கும் குழந்தையின் எடை குறைப்பில் முடியும்;  இது நல்லதல்ல.
* கர்ப்பமாவதற்கு முன் இருந்த எடையை, குழந்தை பெற்ற தாய்மார்கள் திரும்பப் பெற குறைந்தது 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஆகும். இது அவரவர்  உடல்வாகுவை பொறுத்தது.

குழந்தை பிறந்த பின் தாய்மார்களின் எடை குறைய கீழ்க்கண்டவை உதவும்:
* பால் கொடுப்பதின் மூலம் தினமும் 500 கலோரியை இழக்கலாம்.  நிறைய தண்ணீர் குடியுங்கள்.
* தினமும்  குறைந்தது 40 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்யுங்கள்.
* ஊட்டச் சத்துமிக்க உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
 - ராஜிராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT