மகளிர்மணி

முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்க!

கீதா ஹரிஹரன்

இரவு படுக்கப்போகும் முன்பு  சந்தனத்தைக் குழைத்து முகத்தில் தடவி காலையில்  எழுந்ததும்  பன்னீரால்  முகத்தைக் கழுவவும். இதனால் எண்ணெய்ப் பசையுள்ள  முகம் பளபளப்புடன்  இருக்கும்.  தவிர  பருக்களும் வராது. 

முகத்தில்  எண்ணெய் வடிவதைப் போக்க,  ஐஸ் கட்டிகளை  மெல்லிய  துணியில் வைத்துக் கட்டி, முகத்தில்  காலையிலும் , மாலையிலும்  இரண்டு  நேரம் ஒற்றி எடுத்து  வந்தால்  முகத்தில்  எண்ணெய் வடிவது  தெரியாது. 

எண்ணெய்ப் பசையுள்ள சருமம்  உள்ளவர்கள் எப்போதும்  குளிர்ந்த  நீரில்தான் முகம் கழுவ வேண்டும்  என்பதை  மறந்து வீடாதீர்கள்.

வாரம் ஒருமுறை வேப்ப இலை,  புதினா இலை,  மஞ்சள்  மூன்றையும்  மை போல் அரைத்து  முகம் முழுவதும் பூசி  அரை மணி வைத்திருந்து கழுவி வர நாளடைவில்  முகத்திலுள்ள எண்ணெய்ப் பசை  அறவே  அகன்று விடும்.

தினமும்  இரவில்  படுக்கப் போகும்போது முகத்தில்  கிளசரின்  தடவிக் கொண்டால்  எண்ணெய்ப்பசை  நீங்கி  முகம் மிருதுவாகிவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT