மகளிர்மணி

அதிக வருமானம்!

DIN

2017-இல் அதிக வருவாய் ஈட்டும் இந்தியப் பிரபலங்களின் பட்டியலை பிரபல வணிக இதழான "ஃபோர்ப்ஸ்' வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் ஒரே ஒரு பெண் பிரபலம்தான். அவர் நடிகையாகத்தான் இருப்பார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாயகிகளுக்கு நாயகர்களை விட குறைந்த ஊதியம்தான் தரப்படுகிறது. இது இந்தியப் படவுலகில் எழுதப்படாத விதி. 
அப்படியான சூழ்நிலையில், பட்டியலில் இடம் பிடிப்பதே ஒரு சாதனைதான். இந்த நடிகை பிடித்திருப்பது ஏழாம் இடம். 
அந்த நடிகை யார்? அவரது ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா ? 
ரூ.233 கோடி சம்பாதித்து பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் சல்மான் கான். இரண்டாவது இடம் ஷாருக்கானுக்கு. இவரது வருவாய் ரூ. 170 கோடி. ரூ.101 கோடி சம்பாதித்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் கிரிக்கெட் வீரரும் புது மாப்பிள்ளையுமான விராட் கோலி. நான்காவது இடத்தைப் பிடிக்க நடிகர் அக்ஷய் குமார் சம்பாதித்தது ரூ.98 கோடி. 
கிரிக்கெட் ஆடாமலேயே ரூ.83 கோடி சம்பாதித்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு ஐந்தாவது இடம். ஆறாவது இடம் அமீர்கானுக்கு. அவர் ஈட்டியிருப்பது ரூ.69 கோடி. ரூ.68 கோடி சம்பாதித்து ஏழாம் இடத்தை எட்டிப் பிடித்திருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 
ரூ. 63 கோடி ஈட்டி கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி எட்டாம் இடத்திற்கு வர, ஏறக்குறைய அதே தொகையைச் சம்பாதித்திருக்கும் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ஒன்பதாம் இடம் கிடைத்திருக்கிறது. பத்தாம் இடத்தில் இருப்பவர் நடிகர் ரன்வீர் சிங். 2017-இல் இவரது வருமானம் ரூ.62.5 கோடி. 
பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பதால் அவரது வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் 2016-ஆம் ஆண்டில் அவர் சம்பாதித்ததை விட 2017-இல் ரூ. 8 கோடி குறைந்துள்ளது. 
- பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT