முகப்பு
மகளிர்மணி

95 ஆண்டுகளாக இயங்கி வரும்  முதல் லேடீஸ் கிளப்!

மைசூரில் 95 ஆண்டுகளாக இயங்கி வரும் வாணி விலாசா லேடீஸ் கிளப் ‘ மைசூர் அரச பரம்பரையினர் மற்றும் அதிகாரிகள் பெண்கள் முன்னுரிமைக்கு  அளித்த சான்றாக இன்றும் விளங்குகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:08 PM
பகிர்:

மைசூரில் 95 ஆண்டுகளாக இயங்கி வரும் வாணி விலாசா லேடீஸ் கிளப் ‘ மைசூர் அரச பரம்பரையினர் மற்றும் அதிகாரிகள் பெண்கள் முன்னுரிமைக்கு  அளித்த சான்றாக இன்றும் விளங்குகிறது.
வாணி விலாசா என்றழைக்கப்பட்ட மைசூர் மகாராணி கெம்ப நஞ்சம்மணி,  பெண்கள் கல்வியும், சம உருமையும் பெற வேண்டும்.இது குறித்து பெண்களிடையே  விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டுமென்ற என்னத்தில்  மகளிர் அமைப்பொன்றை துவங்க வேண்டுமென்று  நினைத்தன் விளைவுதான் வாணி விலாசா  லேடீஸ் கிளப்'' அப்போது மகாராணியின் வயது 57.  மகாராஜா  கிருஷ்ணராஜ உடையாரின்  சிறப்பான  ஆட்சி காலமாக விளங்கிய  அந்த நேரத்தில், மை சூரில்  உள்ள பெண்கள் பொது நிகழ்ச்சிகளிலும், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளிலும் சகஜமாக  பங்கேற்க வேண்டுமென்று  நினைத்ததோடு, பெண்கள் தங்கள் திறமைகளையும்  வெளிகாட்ட வேண்டுமென்று  நஞ்சம்மணி  விரும்பினார்.
1922- ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி  முதன்முதலாக கரஞ்சிமேன்ஷன் என்ற இடத்தில் மகாராணி  நஞ்சம்மணியில்  வாணி விலாசா லேடீஸ் கிளப் தொடங்கப்பட்டு, பின்னர் நசர்பாத்தில் உள்ள புராதன கட்டடமான  ஃபேர்லான் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது.  தொடக்கத்தில் 15 முதல் 20 பெண்கள்  உறுப்பினர்களானார்கள். முதன்முதலில் மகாராணி  வாணி விலாசா  தலைவராகவும், அவரது  சிநேகிதி  மிஸ் மேக்கன் துணை தலைவராகவும் பொறுப்பேற்றனர். பின்னர் மகாராஜா  நலவாடி கிருஷ்ண ராஜ உடையாரின் மனைவி , லட்சுமி விலாச பிரதாப் குமாரி துணை தலைவரானார். லேடி வெலிங்டன், கோண்டல் மகாராணி, பரோடா மகாராணி,  லேடி ரத்தன் டாடா, லேடி  ஆகாகான்,  லேடி மார்ஷல், திருவாங்கூர்  மகாராணி சேது  பார்வதி பாய்,  பவநகர் மகாராணி, ஆப் கானில்தான் அரசி போன்ற  பிரபலமான   பெண்மணிகள் இந்த லேடீஸ் கிளப்பில்   உறுப்பினர் ஆனார்கள். இதைத் தொடர்ந்து இனி மைசூர் மகாராணி தலைவராகவும், யுவராணி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்க வேண்டுமென்ற  விதிமுறை அமல் படுத்தப்பட்டது.
1971- ஆம் ஆண்டு  கிளப்பின்  தலைவராக பொறுப்பேற்ற மகாராணி திரிபுர சுந்தரம்மணி,  இதுவரை பெரிய இடத்துப் பெண்கள்  மட்டுமே  உறுப்பினர்களாகும் முறையை  மாற்ற விரும்பினார். தேர்தல்முறையில் நிர்வாகிகளை  தேர்ந்தெடுப்பது, நடுத்தர குடும்ப பெண்களும் கிளப்பில்  உறுப்பினர்கள் ஆகலாம் போன்ற விதிமுறைகலை மாற்றினார்.  பண்டைய கால விளையாட்டுகள்  அடுத்துவரும் தலைமறையினரும்  தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.   போட்டிகளில்  உறுப்பினர்கள்  அல்லாதவர்களும் பங்கேற்க அனுமதிக்கபட்டனர்.  இசையில் நாட்டம் கொண்ட  லட்சுமி விலாச பிரதாபகுமாரி, உறுப்பினர் தேர்ந்தெடுப்பது, நடுத்தர குடும்ப பெண்களும் கிளப்பில் உறுப்பினர்கள் ஆகலாம் போன்ற  விதிமுறைகளை மாற்றினார்.  பண்டைய கால விளையாட்டுகள்  அடுத்து வரும் தலைமுறையினரும்  தெரிந்து கொள்ள வேண்டுமென்ற  எண்ணத்தில்  உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. போட்டிகளில்  உறுப்பினர்கள்  அல்லாதவர்களும்  பங்கேற்க அனுமதிக்கபட்டனர்.  இசையில்  நாட்டம்  கொண்ட லட்சுமி விலாச  பிரதாப குமாரி, உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இசைக்குழுவை அமைத்து, மைசூர் அரண்மனையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்நிகழ்ச்சிகள்  அகில இந்திய வானொலியிலும்  ஒலிபரப்பப்பட்டன.
முன்னாள் தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின்  பாட்டி ருக்மிணியம்மா, மகாராணி கல்லூரி முதல்வராக  இருந்தபோது இந்த கிளப்பின் காரியதரிசியாக  பணியாற்றியுள்ளார்.  கர்நாடக  சட்டமன்ற   முன்னாள் பெண்சபாநாயகர் நாகரத்தினம்மா, பிரபல நாவலாசிரியர் ஆர்.கே. நாராயணின்  தாயார் ஞானம்பாள் ஆகியோரும் இங்கு உறுப்பினர்களாக  இருந்தனர். ஞானம்பாள் மைசூர் மகாராணியுடன் சேர்ந்து டென்னிஸ் மற்றும் செஸ் விளையாடுவதும் உண்டு.
தற்போது  பிரமோதா தேவி உடையார் தலைமையில்  இந்த லேடீஸ் கிளப்  தொடர்ந்து  நடந்து வருவதோடு,  நூறு பேருக்கு மேல் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.  உஷா மகேஷ்வரி அர்ஸ்  என்பவர்  40 ஆண்டுகளாக  உறுப்பினராக  இருந்துவருகிறார்.  வயதான  பெண்கள் மட்டுமே  உறுப்பினர்கள்  ஆகிறார்களே தவிர இளம் பெண்கள்   இங்கு வருவதில்லை என்ற குறையும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.